பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 245

வேண்டும்; மதம் வளரக் காணிக்கைகளைக் கொண்டு வந்து குவியுங்கள் என்று மடாதிபதிகள் சொல்லக்கூடும்.

இப்படி, ஒவ்வொருவரும் அவரவர் போக்குக்குச் சாதகமாகக் குறளை வியாக்கியானம் செய்யலாம்.

பதினைந்து ஆண்டுகட்கு முன்பு, நான் பேசுவதற்காகச் சென்றிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில், அந்தப் பள்ளிக்கூடத்துத் தமிழாசிரியர் ஒருவர் மாணவர்களைப் பார்த்து ஒரு குறளுக்குப் பொருள் கூறினார். அவர் ஒரு வைணவர்; திருநாமம் சாத்திக் கொண்டிருந்தார்.

'கற்றதனா லாயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழா ரெனின் என்ற குறளுக்கு, ஆண்டவனின் திருவடிகளைத் தொழாவிட்டால் என்ன படித்துத்தான் என்ன பயன்? என்று அவர் பொருள் சொல்லியிருப்பா ரேயானால் தவறு ஒன்றுமில்லை. ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை; எம் பெருமானான ரீமன் இராமச்சந்திர மூர்த்தியைத் தொழா விட்டால் படித்தும் என்ன பயன்? என்று பொருள் கூறினார்.

எனக்கு எதிரிலேயே இப்படி அவர் கூறியதைக் கேட்டு நான் திகைப்பும் வியப்பும் அடைந்தேன். 'வாலறிவன் என்றால் இராமச்சந்திரன் என்று பொருள் சொல்வதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால், "வால் என்பது அனுமான் வாலைக் குறிக்கும்; அந்த அனுமானை அறிந்தவன் இராமன்; அதனாலே, பூரீஇராமச்சந்திர மூர்த்தியைத்தான் வாலறிவன் என்பது குறிக்கிறது என்றார். அவர் சொன்ன கருத்தைத்தான் பிள்ளைகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்; ஏனென்றால் அவர் ஒரு புலவர் பள்ளியாசிரியர். குறளிலே நாம் பார்க்கின்ற பொருள் வேறு. குறளில் இல்லாத பெருமையை நான் ஆராய விரும்பவில்லை. அதை அறிய எனக்கு எந்த அளவுக்கு அறிவு ஆற்றல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

இந்தக் கூட்டம் முடிந்ததும் நீங்களெல்லாம் வீடு திரும்பும்போது மவுண்ட்ரோடு பஸ், நிற்குமிடத்தில் பஸ்ஸ9க்காகக் காத்திருப்பீர்கள். பஸ் வரும் வரை, அருகே இருக்கின்ற மோட்டார் கம்பெனி ஒன்றில் கண்ணாடி அறைக்குள்ளே அழகான புதிய மோட்டார் வண்டிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை உங்களில் சிலர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.

அந்த மோட்டார் காரில் உள்ள வெள்ளி போன்ற மெருகையும், தங்க நிறப் பூச்சுகளையும், வெல்வெட்டு மெத்தையையும் இன்னும் விதவிதமான ஜோடனைகளையும் காண்பீர்கள். கண்ணாடிக்குப் பின்னாலே உள்ள அந்த மோட்டார்களை நீங்கள் ஏறிச்செல்லும் பஸ் வரும் வரைதான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். பஸ் வந்ததும், பக்கத்திலே உள்ளவர்கள், 'பார்த்தது போதும் பஸ் வந்துவிட்டது; வாருங்கள் போகலாம் என்று அழைப்பார்கள். நீங்கள் எல்லோரும் பஸ்ஸிலேயே ஏறிப் போய்விடுவீர்கள். பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மோட்டார்களிலே உங்களால் ஏறிச் செல்ல முடியாது.