பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - -- கிகக்குறள் சொற்பொருள் சுரபி,

அதைப்போல், இப்படிப்பட்ட திருக்குறள் விழாக்களையும் கொண்டாடி விட்டு, அடுத்து வரும் தீபாவளியையும் கொண்டாடிபட்டாசு கொளுத்துவீர்களேயானால் பயனில்லை.

தமிழ்நாட்டிலே நடக்கும் பல்வேறு விழாக்களும் - பஸ்ஸஇக்காகக் காத்திருப்பவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடிக்குள்ளிருக்கும் மோட்டார்களைப் பார்ப்பது போலக் கொண்டாடப்ப்டுகிறது. என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது: -

நீங்களெல்லாம் பஸ் வரும்வரைஉங்கள் ஓய்வு நேர்த்தில் கண்ணாடி அறையிலுள்ள மோட்டார்களைப் பார்ப்பீர்கள் எனச்சொன்னேன்.இன்னொரு கனவான், தன் மோட்டாரிலே வந்திறங்கில் தன்னிடிமில்லாத வேறொரு வகை மோட்டார்.இருக்கிறதா போர்டு வாங் எனக் கருதி, கடைக்குச் செல்வார். அவர் பார்ப்பதற்கும் நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இன்னும் சிலர், இன்ன நடிகை இன்ன காரில்தான்.செல்வார்; இன்ன் அதிகாரியின் கார் இன்ன மாடல் என்றெல்லாம் கூறி, க்ார்களைப் பார்ப்பார்கள். இப்படிப் பார்ப்பதிலே பயனில்லை: - - வாலிபர்களாகிய உங்களுக்கு என்ன தேவை என்பதைத்தான் நீங்கள் வார்க்க வேண்டும். நீங்கள் விரும்புவது கண்டயிலே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். - - -- .

நாட்டை காக்க வாழ்வுக்கேற்ற வழிவகை அத்தனை பேரும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட், இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கொப்ப, எல்லோரும்: குறளிலே வழி இருக்கிறதா என்று பார்த்தால் தெள்ளத் தெளிவாக - எந்த நூலிலும் இல்லாத - யாரும் இதுவரை எடுத்துக்காட்டாத அறம் நிறைய இருக்கின்றது. - - சாதியைப் பற்றி சொல்லி இருக்கிறதா என்றால், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் - சந்தேகமற சாதி கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது.கல்வியைப் பற்றி என்னச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பர்த்தால்-கற்கக் கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

"எப்பொருள் யார்யர்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்ப்ொருள் காண்ப்து அறிவு

என்று அறிவைப் பற்றிவரையறுக்கப்பட்டிருக்கிறது.

மனித உள்ளத்தில், எதற்கெடுத்தாலும் சந்தேகங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பாக இருக்கிறது.எத்தகைய சந்தேகங்களையும் போக்க வல்லது திருக்குறள்: