பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்.என்.வி. கலைமணி. ... •247

வள்ளுவரின் குறளைப் படித்து ஆராய்வதற்கு முன்பு, வாலிபர்கள் - இளந் தமிழ்த் தோழர்களாகிய நீங்கள் உங்கள் இலட்சியம் என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை அடைய வழிமுறைகள் குறளிலே இருக்குமா என்றால், தாராளமாக இருக்குமென உறுதியிட்டுச் சொல்வேன். அதற்கான நல்ல வழி, சிறந்த நெறி அதிலே உண்டு. இலட்சியத்தைத் தீர்மானித்துக் கொண்டு வள்ளுவரை நாடினால் நல்ல பல்ன் கிட்டும்.

கடைக்குப் போவதற்கு முன்பு கடையிலே இன்னின்ன சாமான்கள் வாங்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டுதான் பணப்பெட்டி்யைத் திறக்க வேண்டுமே தவிர, பண்ப்பெட்டிக்குள் கையை விட்டு, கிடைக்கிற ப்ண்த்தைக் கொண்டுபோய்க் கொடுத்து கடைக்காரன் கொடுக்கிற சாமான்களை எல்லாம் வாங்கி வருவது நல்லதல்ல.

அதைப்போல, ஒரு பழைய நூலை ஆராய வேண்டுமானால்,அந்த நூலை ஒரு பலசரக்குக் கடையாக நினைக்க வேண்டும். நமக்கு என்ன பண்டம் வேண்டுமென்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

நமக்கு என்ன, தேவை? அடிமைப்பட்டு அடித்தளத்திலே கிடந்துழலும் நம் சமுதாயத்துக்கு இன்னின்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒற்றுமை, அன்பு நெறி வளர வேண்டும்.

சமுதாயத்தில் ஒருவனை ஒருவன் கெடுக்க நினைப்பது ஒருவனை ஒருவன் சுரண்டுவது. ஆண்டவனின் பேரால், அநீதிகள் புரிவது:இவைகளை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தம் பெட்டியைத் திறந்து குறளைப் புரட்டினால் நமக்குத் தேவையான பண்டங்கள் கிடைக்கும். ஆச்சாரியார் சொல்வதை வைத்துக் கொண்டு பார்த்தால் அதுவும் கிடைக்கும்.

பூட்டுக் கடையிலே போய், அங்கிருக்கின்ற பூட்டுக்கள்ைப் பார்க்கின்றபோது, எந்தப் பூட்டு உடையாம்ல் நன்றாக இருக்கும்; அலிகார் பூட்டு வாங்கலாமா அல்லது வேறு எது நல்லது என்று உடைமைக்கு உடையவன். யோசிப்பான்.

அதே கடைக்கு வரும் இன்னொரு பூட்டு உடைக்கும் திருடன் என்ன நினைப்பான் எந்த ஆணியைப் போட்டு நெம்பினால் இந்த பூட்டு உடையும் என்பதை ஆராய்வான். அதைப்போல திருவள்ளுவர் தந்த நல்ல் பூட்டை சிலர்கள்ளச் சாவிப் போட்டுத் திறக்க முயலுகிறார்கள்.

என்வே, வள்ளுவர் விழாவிலே தமிழருக்கு எந்த இலட்சியம் தேவை என்பதை நாம் மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

எது நமக்கு இல்லை? தன மனைவியைப் பார்த்து ஒரு கணவன்'என்ன சாமான் வேண்டும்?' என்று கேட்டல், அந்த மனைவி உடனே தன் வாயில் வந்தவற்றை எல்லாம் சொல்ல மாட்டாள். அடுக்களைக்குச் சென்று அங்குள்ள பழங்கலத்திலே கைவிட்டுத் துழாவி, என்னென்ன சாமான் இல்லையோ அவற்றைத்தான் சொல்லுவாள். அதைப்போல்ச்