பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 திருக்குறள் சொற்பொருள் சுரவி

சமுதாயத்துக்குத் தேவையானது எது குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து, அந்தக் குறைப்போக்கும் பண்டத்தைப் பெற வேண்டும்.

இன்றைய சமுதாயம் பல சாதிப் பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இன்று காலை என்னைப் பார்க்க வேண்டுமென்று பீகாரைச் சேர்ந்த ஒருவர் என் வீட்டுக்கு வந்தார்; அவர் பீகார் அரசியலில் நீண்ட நாளாகப் பங்கேற்றிருப்பவர். அவர் என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, நீங்கள் என்ன சாதி? என்பதுதான்.

'நான் திராவிடன் என்றேன். உடனே அவர், 'நான் அதைக் கேட்கவில்லை. என்ன சாதி? என்று மீண்டும் கேட்டார். நான் மீண்டும், திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்றேன். அவர், கொஞ்சம் தயங்கி, 'இங்குள்ள எல்லோரும் திராவிடர்தான் இருந்தாலும் நீங்கள் பிற்பட்ட (Backward) சமுகத்தைச் சேர்ந்தவரா? முன்னணி (Forward) சமூகத்தைச் சேர்ந்தவரா? என அறிய விரும்புகிறேன். நான்கூட எங்கள் மாநிலத்திலுள்ள பிற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவன் என்றார். அதன்பிறகு, நானும் பிற்பட்ட சமூகத்தவன்தான் என்றேன்.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நமக்குள்ளே ஒருவரை யொருவர் பார்த்து, நீ என்ன சாதி? என்று கேட்டுக் கொள்வது அவமானமாகும். தெருவிலே போகின்ற ஒரு பெண்ணைப் பார்த்து, நீ அழகா, அவலட்சணமா? என்று கேட்டால், என்ன அர்த்தம்? அந்தப் பெண்ணுக்கு ஆத்திரம் வராதா? மேல் நாட்டில், ஒரு வெள்ளைக்காரப் பெண்னைப் பார்த்து, உன் வயது என்ன? என்று கேட்பதும், அந்த நாட்டு ஆடவரைப் பார்த்து, 'உன் சம்பாத்தியம் என்ன? என்று கேட்பதும் கூடாது; அப்படிக் கேட்பது ஒர் அவமானமாக அங்கு கருதப்படுகிறது; இது மேல்நாட்டு நாகரிகம்.

நம் நாட்டில் ஒருவரைப் பார்த்து மற்றொருவர். நீ என்ன சாதி? என்று கேட்கும்போது, நமது ஊனும், உள்ளமும் குன்றிப் போகிறது. அமெரிக்காவிலே உள்ளவர்கள், இப்படி 'உன் சாதி என்ன? அவன் சாதி என்ன? என்று கேட்க மாட்டார்கள்.

கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிற நேரம் வரை ஒருவரும் சாதி கேட்பதில்லை. கல்யாணப் பேச்சு பேசுகிற நேரத்தில் மட்டும் சாதி குறுக் கிடுகிறது. பையன் யார்? என்று பெண் வீட்டார் கேட்பார்கள் என்ன சாதி என்று கேட்பது அநாகரிகம் என்று கருதி, பொதுப்படையாக பையன் யார்? என்பார்கள். உடனே, பையன் இன்னாருக்குச் சொந்தம்; இன்னாரின் மகன் என்று சொல்லும்போது, இன்ன நாடாருக்குச் சொந்தம், அல்லது இன்ன ரெட்டியாருக்கு உறவு என்று மறைமுகமாகச் சாதியைச் சொல்லுவார்கள். இப்படி ஒருவர் சாதியை ஒருவர் புரிந்து கொண்டுதான் திருமணங்கள் நடைபெறுகின்றன.

இந்தச் சாதிப்பற்று அவ்வளவு சுலபத்தில் போய்விடாது. நம்முடைய பிள்ளைகளிடத்தில் - பேரன்மார்களிடத்தில், நாமெல்லாம் செட்டியார் என்றால், அவர்கள் கேட்பார்கள் - செட்டியார் என்றால் யார்? -என்று: