பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 249

ஆனால், இந்தத் தலைமுறையில் அது அடியோடு போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் சாதியைச் சொல்ல வெட்கப்படக்கூடிய அளவுக்கு சாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும்.

வள்ளுவர் குறளில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியிருக்கிறார். உலகம் பார்த்து, பேரறிவாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு பெரியார் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதனால்தான் அது வெற்றி பெற்றது.

'என் பேச்சை நம்ப வேண்டாம்; வள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் - வள்ளுவரை நீதிமன்றத்துக்கு அழைத்தால் - நம் வழக்கு வெற்றி பெறும்; குற்றமற்றவர்கள் என நாம் விடுவிக்கப்படுவோம்.

குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் - நியாயம் தேடுபவர்கள் ஒரு வழக்கறிஞரை நாடுவது போல, சமுதாய மன்றத்திலே வள்ளுவரைக் கொண்டு வந்து நிறுத்தி நாம் வாதாடலாம்.

நாமெல்லாம் 'சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள்; “சூரியனைத் தொழுதால் சொர்க்க லோகம் கிட்டும்; விநாயகரைத் தொழுதால் கைலாசப் பதவி கிடைக்கும் என்று ஏமாற்றுப் பிரச்சாரம் செய்பவர்களை நாம் கண்டித்தால் நாத்திகர்கள் என்று நம் மீது குற்றஞ் சாட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட தமிழ் விழாக்களிலே, மக்கள் மன்றங்களிலே வள்ளுவர் குறளைச் சொல்லி இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்கலாம். வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை எடுத்துச் சொல்லி வழக்காடினால் வழக்குத் தீர்ப்பில் நமக்கு வெற்றி கிடைக்கும். வழக்குத் தொடுத்தவர்கள் முக்காடிட்டுச் செல்வார்கள். எனவே, நீதிமன்றத்திற்கு நல்ல நெறியை தந்திருப்பவர் திருவள்ளுவர்.

எனவே, இப்படிப்பட்ட மன்றங்கள் கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப் படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மேலே வள்ளுவர் வாசக சாலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைப் படித்திருப்பீர்கள். திருக்குறள் ஒவ்வொருவரின் பார்வையில் ஒவ்வொரு விதமான பொருளை வழங்குவதை அண்ணா அவருக்கே உரிய பாணியில் எடுத்துக் காட்டியிருந்தார். அண்ணா என் குறளின் பன்முகப் பொருளைக் காட்டுகின்றார் என்றால் திருக்குறளுக்கு உலகம் தழுவிய ஒரே மாதிரியான பொருள் வழங்கப்பட வேண்டும் என்பதினால்தான்!

ஆகையினாலேதான் அறிஞர் அண்ணா பேச்சை முடிக்கிறபோது, 'கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டும்' எனறாா.

- அறிஞர் அண்ணா