பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1812-ஆம் ஆண்டு வரை ஓலைச் சுவடியிலே இருந்த

திருக்குறளை அச்சேற்றிப் பதிப்பித்த ஞானப்பிரகாசர், அம்பலவாணர் வாழ்க!

இருபதாம் நூற்றாண்டு நிறைவுற்று. புதிய நூற்றாண்டின் புதிய ஆயிரத்தாம் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்க நாளில் வான்புகழ் பெற்ற வள்ளுவருக்கு வானளாவிய சிலை இந்திய நாட்டின் தென் கோடியில். கன்னியா குமரியில் மாண்புமிகு தமிழக முதல்வ்ர் டாக்ட்ர் கலைஞ்ர் அவர்களின் அரிய முயற்சியால் நிறுவப் பெற்றுள்ளது. இமயத்தின் இமயமென் உயர்ந்து நிற்கிறார்.

திருவள்ளுவர், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே ஏற்றத் தாழ்வற்ற சமனிலைச் சமுதாயத்தை உருவாக்க விழைந்தவர். மேலிருந்தவரும் மேலல்லர், கீழிருந்தவரும் கீழல்லர் என்ற உரத்த சிந்தன்ையின் மூலம் உலகறத்தை உணர்த்திப் பெருந்தகையாளர்.

பண்பையும் அறிவையும் முதன்மைப்படுத்திச் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காண விழைந்தவர். மரனூடம் அவர் தம் பாடுபொருளாக விளங்கியதால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் ുഖങ്ങநினைந்து போற்றுகின்றோம். -

இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் திருவள்ளுவரின் எண்ணங்கள் காலந்தோறும் ஏற்றம் பெற்று விளங்குகின்றன.

தமிழரின் பண்பாட்டுக் கூறுகளைத் தனித்தன்மையாகக் கொண்டு தன்னையும், தன் மொழியையும்,தம் மக்களையும் தன்நாட்டிையும் அடையாளப் படுத்திக் காட்டுகின்ற அறிவுச்சுடிராகத்திருவள்ளுவம் விளங்குகின்றது.

திருக்குறள் தோன்றிய கால்ந்தெர்ட்டு இன்றுவர்ை அதன் பாடுபொருளைப் பன்முகப் பார்வை கொண்டு ஆய்ந்தோர் பலர் திருக்குறளுக்குப்பின் எழுந்த பல்வேறு இலக்கியங்களும் அதன் கருத்துச் செறிவையும், சொல்லாட்சித் திறத்தையும் பயன்படுத்திக்கொண்டின.

திருக்குறளின் விளக்கங்களாக, உரை மரபின் முன்னோடிகளாக, பழந்தமிழ்ச்செய்யுள் இலக்கியங்களாக அவ்ை விளங்கின்

அவற்றிற்குப் பின்ன்ர் இலக்கியங்களின் நுட்பத்தை அறிய விழைந்த உரையாசிரியர்கள் திருக்குறளில் மூழ்கி அவற்றின் தொடரிலும், சொற்புதுமையிலும், எளிமையிலும் நுட்பம் கண்டு மகிழ்ந்தனர்.