பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமண: 251 - திருக்குறளுக்கு உரை விளக்கம் தந்த பழைய உரையாசிரியர்களும், புத்துரையாசிரியர்களும் திருக்குறளைத் தம்விளக்கத்திற்கு விளக்காகப் பயன்படுத்தின்ர்:

காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் திருக்குறளின் கருத்தைப் போற்றின; வளர்த்தன. சமயந்த்ொறும் நின்ற தனி நூல்ாகத் திருக்குறள் விளங்கியது. - -

சைவமும், வைணவமும் சமணமும் பெளத்தமும் கிறித்தவமும் பிற சமயங்களும் திருவள்ளுவரைத் தம்மவராகவே ஏற்றிப் போற்றின். திருவள்ளுவரின் குறள்ஈரடிகளைத் தாம் ஏத்தும் இறையாகவே போற்றினார் சிவப்பிரகாசர்.

மேலைநாட்டு வரவின் பயனாகத் திருக்குறள் ஓலையினின்றும் அச்சுருவிற்குப் பெருமாற்றம் கொள்கின்றது. 1812-ஆம் ஆண்டில் முதன் முதல் திருக்குறள் அச்சேற்ற்ப் பெறுகின்றது.

தஞ்சை ஞானப்பிரகாசரும், அம்பலவாணத் தம்பிரானும் இந்த முதல் பதிப்பைத் தமிழில் அச்சேற்றி இலக்கிய உலகில் பெருமை பெறுகின்றனர்.

அச்சுருவம் பெற்ற பின்னர், கடந்த இரு நூற்றாண்டுகளாகத் திருக்குறளுக்கு எழுந்த நூல்கள் பல ஆயிரம், பதிப்புகளாகவும், பல்பொருள் ஆய்வுகள்ாகவும் நாள்தோறும் இன்றும் தோன்றிக் கொண்டேயுள்ளன. கணினி யுகத்திலும் குறள் குறுந்தகடுகளாக உருப்பெற்றுப் புதிய பொலிவில் கோலம் கொள்கிறது.

திருக்குறள் எழுந்த காலச் சூழலின் பின்னணியை ஆராய்ந்த அறிஞர் பெருமக்கள், தமிழின் பண்பாட்டை நிலை நிறுத்தத் திருவள்ளுவர் மீட்டெடுத்த புதிய மரபுகளை ஆய்ந்து வெளியிட்டனர்.

தமிழ் அகமரபிலும் புதிய சிந்தனையைக் கண்ட புத்திலக்கியச் சிற்பியாகப் போற்றினர். அறத்தின் பல்வேறு வீறுகளையும் மானுட வாழ்க்கைக்குப் பொருத்திக் கண்ட வள்ளுவரின் சிந்தனைப் போக்கை விவரித்தனர்.

உலகியலும் உளவியலும் சார்ந்த வள்ளுவ நெஞ்சம் மானுட மேம்பாட்டையே போற்றி வலியுறுத்தியது என்பதை ஆய்வாளர் திறம்படச் சுட்டினர்.

பல்வேறு சமய, அரசியல், பண்பாட்டு இயக்கங்களும், வள்ளுவத்தின் பொதுமையை உணர்ந்து தழுவிச் சிறப்புப் பெற்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தமிழ் இதழ்கள் பலவும் திருக்குறளையே குறிக்கோள் தொடராகக் கொண்டு வரலாற்றில் இடம் பெற்றன. தங்கள் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்துக் களஞ்சியமாகவும் திருக்குறளை மேற்கோள் காட்டி மகிழ்ந்தனர்.