பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருக்குறள் சொற்பொருள் சுரபி விடுதலைக்கு முன்னும் பின்னும் தேசிய இயக்கங்களும் பகுத்தறிவு இயக்கங்களும் வான்புகழ் வள்ளுவரின் கருத்தைப் பரப்புவதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டன. இந்திய வரலாற்றின் நிகழ்வுகளிலும் தலைவர்களும், அறிஞர்களும் திருக்குறளின் கருத்துகளைப் பரப்பினர்.

விடுதலைக்கு முன்னரே தந்தை பெரியார் குறட்பாவைத் தமிழர்தம் அடையாளச் சின்னமாக எடுத்துக் காட்டினார்.

விடுதலைக்குப் பின்னர் அறிஞர் அண்ணா திருக்குறளைத் திருப்பணியாகவே கொண்டு எழுச்சியுறச் செய்தார்.

குறளோவியம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொல்லிலும் கல்லிலும் திருவள்ளுவரை வடித்துக் காட்டி திருவள்ளுவருக்கு என்றும் அழியாத சின்னத்தை உருவாக்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவள்ளுவரின் சிலையை வியந்து பாடிய (1904) திருமணம் செல்வக்கேசவராயரின் எண்ணத்தை எதிரொலிக்கும் வண்ணம் முக்கடல்கள் இணையும் தமிழ் மண்ணில் மனித சிந்தனையின் தூய உருவமாகத் திகழும் திருவள்ளுவரின் திருவுருவம் கம்பீரமாக எழுந்து நின்று புதிய ஆயிரத்தா மாண்டிற்கு நல்வரவு கூறுகின்றது.

- முனைவர் இ. சுந்தரமூர்த்தி தமிழ் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.