பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 திருக்குறள் சொற்பொருள் சுரபி

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (மேற்படி 107). என் அழகிய காதலியின் தழுவின்பம், ஒருவர் தம் சொந்த வீட்டிற் குடியிருந்து தாம் தேடிய பொருளைப் பலரொடும் பகிர்ந்துண்ணும் இன்பத்தை ஒத்த்ாகும்.

இந்நாற் குறளாலும், திருவள்ளுவர் உடிையவாதம் பொருளை இல்லாரொடு பகிர்ந்துண்ணும் கூட்டுடமையைத் தெரிவித்தார். அவர் காலத்தில் மக்கட்டொகை மிகமிகக் குறைவு. நிலப்பரப்பில் முக்காற்பங்கு மரமடர்ந்த காடு; காற்பங்கு மக்கள் வாழும் நாடு முத்தமிழ் நாட்டிலும் மக்கள் முக்கோடிக்கு மேல் இருந்திருக்கமுடியாது. நெட்டிடையிட்டு அரிதாக நேரும் பஞ்சந்தவிர, ஆண்டுதோறும் கோடிை மழையும் கால மழையும் அடைமழையும் தப்பாது பெய்யும். நில வளமும் நீர்வளமும் மிக்கிருந்தது. ஆகவே, உணவுத் தட்டும் வேலையில்லாத் திண்டாட்டமும் நலக்குறைவும் ஒரு சிறிதுமில்லை. ஆதலால், வறும்ை வருந்தும் சோம்பேறியை நோக்கி - --

இலமென் றசைஇ.இருப்பாரைக்காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (குறள் 1040) என்று கண்டித்தார் திருவள்ளுவர். -

இனி, உழவதிகாரத்தை அடுத்து, நல்குரவு, இரவு, இரவுச்சம், தயமை என்னும் நாலதிகாரங்களை வரிசையாக வைத்திருப்பதால், உழவை, மேற்கொள்ளாவிடின் வறுமையும், வறுமையால் இரப்பும், இரப்பால் அஞ்சத் தக்க துன்பமும், அத்துன்ப மிகுதியால் கயமையும் (போக்கிரித்தனமும்) ஏற்படுமென்று குறிப்பாற் பெற வைத்தாரேனும்

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது (குறள் 1041): இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் (குறள் 1942) தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை(குறள் 1043) என வறுமையைக் கடுமையாகக் கண்டித்தும், இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று (குறள் 1051) என்று ஒருதரர் வறியரை ஒரு சார் நன்மக்களிடம் இரக்க ஏ இருப்பதால், தனிப்பட்டவன் தவற்றாலன்றி வேறு வழிகளாலும் வறுமை நேருமென்றும்; அத்தகைய வறுமையை நன்மக்களும் அரசனுமே நீக்கவேண்டுமென்றும் அறிந்து அவ்வறத்தைச்செய்யுமாறு:ஆங்காங்குத்