பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருக்குறள் சொற்பொருள் சுரபி வேலையின்றியும் இருக்கும் இக்காலத்தில், திருவள்ளுவர் வகுத்த பரீத்துண்டலே எல்லா மக்களும் பண்பாட்டுடன் வாழ்தற்கு இன்றியமை யாத தாகின்றது. மக்கட் பண்பாடு

ஆறறிவு படைத்த மாந்தன் உயிரினங்கள் எல்லாவற்றுள்ளும் தான் உயர்தினை அல்லது உயர்குலம் என்று அறிவதால், பாத்துண்ணும் இயல்புடைய காக்கை போல சில அஃறிணையினங்களினும் பண்பாட்டில் தாழாவாறு, பாத்துணறத்தைச் சிறப்பாகக் கடைபிடிக்கக் கடமைப்பட்டுள்ளான். 1. மன்பதை முழுதும் ஓரினம்

'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் பூங்குன்றனார், "ஒன்றே குலம் ஒருவனே தேவனும் என்றார் திருமூலர். ஆதலால் ஒவ்வொருவனும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதல் வேண்டும். 2. அடிப்படைத் தேவை அனைவர்க்கும் பொது

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே யிதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே (புறநானூறு 189) உடுப்பவை யிரண்டே என்றது கீழாடை மேலாடைகளை உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் 3. செல்வத்தின் பயன் அஃதில்லார்க் கிதல் 4. இறக்கும்போது செல்வம் உடன் வராது

பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லைபிறந்துமண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை (திருவேகம்ப 7) காதற்ற ஆசியும் வாராது காணுங் கடைவழிக்கே (திருத்தில்லை 10) அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே (திருத்தில்லை 13) 5. அகக்கரண புறக்காரண ஆற்றல்கள் இயற்கையில் வேறு பட்டுள்ளமையால் ஒருவரைப் புகழ்தலும் இகழ்தலும் கூடாது

நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பத றிவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறநானூறு 192)