பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 257

முறையென்பதை இங்கு இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கை யென்று கொள்க.

உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம். இல்லாமையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அது அவன் தவறன்று. ஆதலால் அவனை இகழக்கூடாது. அவன் தன் உடல் வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாள்னுக்கு உதவுவதைப் பாராட்டல் வேண்டும். 6. மக்கட் பிறப்பு பண்பாட்டையே பெரிதுத் தழுவியது

புறத்துறப் பெல்லாம் எவன்செய்யு யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள் 79) உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (குறள் 923) அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் (குறள் 997) ஆதலால், பாத்துண்டலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடமை யாட்சியே, இந்தியா போன்ற மக்கட் பெருக்க வறுமை நாட்டிற்கு ஏற்றதாம். வள்ளுவர் கூட்டுடமையின் தனிச்சிறப்பு

1. எல்லார்க்கும் ஏற்றது :- காரல் மார்க்கசு கூட்டுடமைக் கொள்கையைத் தொழிலாளர்க்கென்றே வகுத்தார். இரசிய சீன நாடுகளின் கூட்டுடமையாட்சியிற் கைத்தொழிலருங் கல்வித் தொழிலருமான எல்லா வகுப்பினரும் வாழினும், தொழிலாளர் கையிலேயே அதிகாரம் அமைந் துள்ளது. அவ்விருநாடுகளையும் தழுவியுள்ள இந்தியக் கூட்டுடமைக் கட்சிகளும் தொழிலாளர் ஒன்றியங்களாகவே இயங்கி வருகின்றன.

இன்று இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தாக்குண்ட வர் தொழிலாளர் மட்டுமல்லர், பல்லாயிரக்கணக்கான பொறிவினைஞரும் மருத்துவரும் ஆசிரியரும் பிறரும் ஆவர். ஆதலால், கூட்டுடமையாட்சி கற்றோரும் மற்றோருமான அனைவர்க்கும் பொதுவானதே.

2. ஈகையாளர்க்கும் புதுப்புனை வாளர்க்கும் தமிழ்ப் புரவலர்க்கும் கல்வி வள்ளலர்க்கும் செல்வ வரம்பிடாதது :- சிலர்க்குப் புதுப்புனவாற்றலோ புதுச் செய்முறை கண்டுபிடிப்பாற்றலோ இருக்கலாம். அவர் விருப்பப்படி விட்டுவிடின், அவ்வாற்றலை மேன்மேலும் வளர்த்துப் பெரும் பொருளிட்ட வழியுண்டாகும்; பெரும் பயன்வினையும். அதனால் "ஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம்" என்பதை உணர்தல் வேண்டும். மேனாடுகளில் சிறப்பாக வட அமெரிக்காவில், பல்வேறு சூழ்ச்சிப் பொறிகளைப் புதுப்புனைந்தவர்க்கு அரசு உரிமையளித்து ஊக்கியதனால், அவரும் செல்வத்திற் சிறந்ததோங்கினர்; அவர் நாடுகளும் செழித்துப் பொருள் வளங்கொழித்தன. கொழிக்கின்றன.