பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருக்குறள் சொற்பொருள் சுரபி

இங்கே இந்தியாவில் அதற்கு நேர்மாறாக நேர்ந்துள்ளது. கோவைக் கோ. துரைசாமி நாயக்கரை (G.D. Naidu) நடுவணரகம் ஊக்கவில்லை; நாட்டரசும் ஊக்கவில்லை. அவரை ஊக்கியிருந்தால் உலக முழுவதற்கும் பயன்படும் ஒரு எடிசனாகி இருப்பார், நடுவணரசு அவரை ஊக்குவதற்கு மாறாக, அன்முறையான அளவிறந்த வருமானவரி சுமத்தி அவர் உள்ளந் தளரவும் நெஞ்சம் புண்படவும் செய்தது. அதனால், அவர் தம் மன நோவின் கடுமையை தம் புதுப்புனைவுகளையுங் கண்டுபிடிப்புகளையும் வெளிப் படையாகச் சுட்டெரித்துக் காட்டினார்.

இக் காலத்திற் பொன்னும் எண்ணெயும் போன்ற கனியப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம், புதுப்புனைவுகளாலும், கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்க முடியும். ஆதலால்,அவ் வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல் வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால் புதுப்புனைவாளரை யெல்லாம் குல மத கட்சி வேறுபாடின்றி நாட்டு வளம் பெருக்கியவராகவும் உலகப் பொது நலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும்.

இனி, தன்னலமின்றி மன்னலமே பேணி தம் பொருளையெல்லாம் வரையா தீயும் வள்ளல்கட்கும் செல்வ வரம்பிருத்தல் கூடாது.

ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215) பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் (குறள் 216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் (குறள் 217) வள்ளன்மார் நாட்டு வறுமையைப் போக்குவதால் அரசின் கடமையை ஆற்றுபவரும் அதன் சுமையைக் குறைப்பவரும் ஆவர்.

ஈகையாளர்க்கு ஈதலே இன்பம். ஈயாமை அவர்க்கு இறப்பினுங் கொடிய துன்பம்

ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்தாமுடமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228) சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ஈதன் இயையாக் கடை (குறள் 230) முந்நூ றுர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்து றுணரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே (புறநானூறு 110) ஈகை யரிய யிழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில்