பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 253

சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றி தம்வயி றருத்தி யுரைசா லோங்குபுகழ் ஒரீஇய முரைககெழு செல்வர் நகர்போ லாதே (புறநானூறு 127) ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து (குறள் 220) இந் நூற்றாண்டிலும், தம் செல்வம் முழுவதையும் இரப்போர்க்கீந்த செண்டத்தூர் வள்ளல் ஐயாத்துரை முதலியாரும், கல்விக்கீந்த காரைக்குடி வள்ளல் அழகப்பச் செட்டியாரும் இருந்தனர்.

3. மதத்தில் தலையிடாதது :-மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையென்றும், கூட்டுடமை கொள்கைக்கு முரணானதென்றும், தவறான கருத்து இருந்து வருகின்றது. அதற்கு மாறாக, மதமே மக்கள் பண்பாட்டிற்கு அடிப்படையானது என்பதையும் கூட்டுடமைக்கு ஏதுவானது என்பதையும் பலர் அறிந்திலர்.

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது (குறள் 10.75) ஒரு நாட்டில் அல்லது ஊரில் கொலை, களவு, கொள்ளை கற்பழிப்பு முதலியன பெரும்பாலும் இல்லாதிருத்தற்கு அரசன் அல்லது அரசு தண்டிக்கும் என்னும் அச்சமேயன்றி வேறொன்றும் கரணயமன்று. அங்ங்னமே பலர் தீயொழுக்கத்தை விட்டு நல்லொழுக்கத்தை மேற் கொண்டிருத்தற்கும் மறுமையில் இறைவன் எரிநரசிலிட்டுத் தண்டிப்பான் என்னும் அச்சமே கரணியமாகும். பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது. ஆதலால் மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும்.

இறைவன் எல்லாவுயிர்கட்கும் தந்தையென்பதும், அறவாழி யந்தனன் என்பதும் மதத்தின் அடிப்படைக் கொள்கை. அறிவும் அன்பும் நிரம்பாத உலகத் தந்தைக்குத் தன் மக்கள் எல்லாரும் வயிறார வுண்டு வாழ வேண்டுமென்பதே பெரு விருப்பம். அங்ங்ணமாயின், முற்றிவனும், அன்பே வடிவானவனுமான பரம தந்தைக்கு மக்களெல்லாம் கவலையின்றி உண்டுடுத்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்ட கூட்டுடமை யாட்சியே. மகிழ்ச்சித் தரும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

கூட்டுடமையாட்சியில், கல்வித் தொழிலரும், கைத்தொழிலரும் சமமாகக் கூடி வாழும் உடன்பிறப்புணர்ச்சிக்கு மதக்கொள்கையே பெரிதும் துணை செய்யும்.

கிறித்தவர் நம்பும் எதிர்கால ஆயிரவாண்டுலகவர சாட்சிக்குக் கூட்டுடமைக் கொள்கையே தோதாகும்.

மதம் என்பதும், இம்மை மறுமை கடவுள் என்னும் மூன்றையும் பற்றி ஒருவன் மதித்துக் கொள்ளுங் கருத்தேயன்றி வேறன்று. அதற்கென்று