பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2翁● திருக்குறள் சொற்பொருள் சுரபி,

தனியாகப் பொருட்செலவுங் காலச் செலவும் வினை முயற்சியும் இடவொதுக்கீடும் அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை. ஒருவன் காலையில் எழுந்தவுடனும், பின்னர் உண்ணு முன்னும், ஒரிடத்திற்குப் புறப்படு முன்னும், ஒரு வினையைத் தொடங்கு முன்னும், ஒரு நன்மை கிட்டியபோதும், தீங்கு நேர்ந்த போதும், உறங்கப் புகுமுன்னும் இறைவனை நன்றியறிவோடு அல்லது முறையீட்டுணர்ச்சியோடு கைதொழுது ஒரு நிமையம் எண்ணினாலும் இறை வழிபாடு செய்ததாகும். இங்ங்னம் மன நிலையிலேயே இருத்தக்கூடிய மதத்தை எவரும் அழிக்க முடியாது. இனி, கூட்டு வழிபாடும், ஒய்வு நாளில் அல்லது நேரத்தில் பொதுவிடத்தில் அல்லது ஒருவர் இல்லத்தில், பலர் கூடிச் செய்யலாம். இங்ங்னம் எளிய முறையில், அரசிற்கு எவ்வகை இடர்பாடும் விளைக்காது இயங்கக்கூடியது மதம். படிமை மேற்படிக் கணக்காய்ப் பாலைக் கொட்டுவதும், பெருங்கலத்திற் கலக்கணக்காய் நெய்யை வார்த்து விளக்கெரிப்பதும் போன்ற வினைகளே பொருளழிப்பும் வீண் செயலுமாகும்.

கடவுளை கட்புலனாகக் காண முடியாமை பற்றியே கடவுளுண் மையை மறுத்துவிட முடியாது. உயிரில்லாத, அதனால் அறிவுமில்லாத நாள்களும் கோள்களும் தத்தம் நிலையில் நின்றும் நெறியிற் சென்றும் ஒழுங்காகத் தத்தம் தொழிலைச் செய்து வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சி அவற்றை இயக்குவான் ஒருவனின்றி நிகழ இயலாது. மாந்தனறிவு அளவிலும், ஆற்றலிலும் மிக மட்டுற்றிருப்பதால் எல்லா இயற்கை நிலைமைகளையும் உணர்ந்து கொள்ளவியலாது.

கடவுளுண்மையை எல்லாரும் நம்புமாறு நாட்டிற்குப் போதிய சான்றுகள் இல்லையெனின், அதை மறுத்தற்கும் போதிய சான்றுகள் இல்லையென்பதை உணர்தல் வேண்டும்.

இனி, எங்ங்ணமிருப்பினும் மதமே கூடாதெனின், கடவுள் இல்லையென்பதும், உலகியம் (லோகாயதம் அல்லது சார்வாகம்) என்னும் மதமாதலின், மதத்தைப் பற்றி ஒருவரையொருவர் தாக்காதிருத்தலே மதியுடைச் செய்தியாம்.

திருவள்ளுவரும், ஞா. தேவ நேயப்பாவாணர் தம் நூலைக் கடவுள் வாழ்த்தொடு தொடங்குதலின், வள்ளுவர் கூட்டுடமை மதத்தை விலக்குவதன்று என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இரசிய சீன நாடுகளிலும், கிறித்தவர், சிறுபான்மையரேனும் இடர்பாடின்றி இருந்துவருவதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஆகவே,வள்ளுவர் கூட்டுடமையே தலைசிறந்ததும் எல்லார்க்கும் எக் காலத்திற்கும் ஏற்றதுமாகும்.

திராவிடப் புலவர் : ஞா. தேவநேயப் பாவாணர்