பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் தமிழ் முதனூலா; தரும சாத்திர சாரத்திரட்டா?

குறள் தமிழ் நூலன்று, வடமொழி நூல்வழி வந்தது என்பதற்குக் கூறப்படும் இரண்டோரே துவைச் சிறிதாராய்வோம்.

குறள் வடமொழி கலவாத் தனித்தமிழ் நூலென்பார் ஒரு சாரார்; அது வைதீக தரும சாத்திர வடிவே என்பார் பிறிதொரு வகுப்பார். இவ் விருவர் கூற்றும் மெய்ம்மையின் இருதலை மலைவார் பொருள் கருதாமல் தருமுறை வகையாம். வடமொழி சொற்களும் வடநூற் கருத்தும் ஒரு சில குறளில் வருதலினாலது தமிழ் நூலாகாதென்னும் வாதம், மொழி பெயர்ப் பொன்றைப் பெயர்த்த மொழியில் முதனுலென்பது போல, முழு மெய் தழுவாக் கிளவியாகும். வள்ளுவர் குறளில் வடசொல் ஒரு சில வருவது மெய்யே; அதன் ஆழ்ந்த பொருட் பெருங்கடலில் சில சிற்றலையின் எதுரொலி வடநூலில் கேட்பது முண்மை. இவை குறள் தமிழ் நூலின்றெனக் காட்டுமேதுவாமா? வேறுபட்ட நாகரிக வகுப்பார்தம் கூட்டுறவால் நாளடைவில் சில சொல்லும் கொள்கைகளும் இரு திறத்தார் மொழிகளிலும் கைம்மாறிக் கலப்பதியல்பு; கலப்பல் ஒரு சில புகுந்து வழங்கக் காண்போம். அதுபோல, தமிழ்ச் சொற்கள் வடமொழியிடம் பெற்று வழங்குவதும் மறுக்கவொண்ணா உண்மையாகும். சமய மதச் சார்புகளில் தமிழரிடையமையாத சாதிபேத மாயவாத வடசொற்கள் தமிழிலேறில், ஆணி, முத்தம், பிரவாளம், நீரம், மீனம் போல பலச் சொற்கள் தமிழ் ஆரியத்திற் களித்த கொடை அறியாதார் அறியாதாரே?

பல்வேறு மக்கள் வாழ்வில் பொதுவான வழக்கங்கள் கொள்கையோடு கருத்துக்கள் ஒத்திருத்தல் இயல்பாகும். சிறப்பியல்கள் பற்றிய சிற்சிலத் துறையில் மட்டுமல்ல வேறுபட நேரக்கூடும். அறம் பலவும் அனைவருக்கும் மக்களியலொற்றுமையால் ஒத்திருக்கும் எண்ணரிய பல்வேறு உயிரினத்துள் மாந்தரெல்லாம் ஓரினமே. உருவத்திற்போல, உள்ள உணர்ச்சி எண்ணம், விருப்பமொடு பசி காம வினைமைகளில் மக்கட்டன்மை என்னுமொரு பொதுவியல்பை மாந்தரிடை எங்கும் காண்போம். ஒத்த இயலுடைமையினால் வாழ்க்கை முறை ஒழுக்க வகை பெரும்பாலும் ஒத்திருக்கும். அதனாலே, பொதுவாகப் பல்வேறு மொழிகளிலும் நூல் கூறு மறம் பலவும் பெரும்பாலும் ஒத்திருக்கும். பொய்யாமை, கொல்லாமை, வெஃகாமை,