பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருக்குறள் சொற்பொருள் சுரபி

கள்ளாமை போல்வ பல ஒழுக்கறங்கள் எல்லார்க்கும் எஞ்ஞான்றும் எந்நிலத்தும் பொதுவாகும். அதனாலே பல்வேறு மொழிகளிலும் அற நூல்கள் ஒத்திருப்பது இயற்கையாகும். அது கொண்டவ் வற நூல்கள் ஒன்றிலிருந் தொன்றிரவல் கொண்டதென்றும், அவற்றிடையே தொடர்பிருத்தல் வேண்டுமென்றும் கூறுவது தவறாகும். எல்லார்க்கும். பொதுவின்றி சில வகுப்பார் சிறப்பொழுக்க வழக்கத்தால் அமையு மறவகை கூறுமிரு நூலும் சான்றின்றி ஒன்று பிறிதொன்றற்கு முதலென்று கொள்ளுவதும் குற்றமாகும். சிறப்பொழுக்கம் பற்றியெழும் அடி அறங்கள் ஒத்தமையக் கூறும் நூல்கல் காணுங்கால், அவற்றினிடைத் தொடர்புண்மை ஆராய்தற் கிடலொருங்கால் இருக்கு மென எண்ணல் கூடும். அதற்கெதிராய் அடிப்படையாம் ஒழுக்கறமும் வாழ்க்கை முறை மரபுகளும் மாறுபட வகுக்கும் நூல்கள். வேறுபடும் நாகரிகம் விளக்கும் தனி நூல்களெனக் கொண்டவற்றை உறழாமல் ஆய்வதுமே அறிவறமாம்.

இவ் வுண்மை மறவாமல் உளத்திற்கொண்டு, தமிழ்க் குறளை வட தரும நூல்களொடு ஒத்து நோக்கி, இயைபு முரண்பாடுகளை நடுநிலையில் ஆராய்வோம். வள்ளுவர் நூல், வேதசாரம், பல தரும சாத்திரத்தின் தெளித்தவடி என்பவரின் ஏதுவொடு சான்றுகளைத் தகவோடு நிறுத்துண்மை தேர்ந்து தெளிவோம்.

இவ்வுண்மை மறவாமல் உளத்திற்கொண்டு தமிழ்க் குறளை வடதரும நூல்களொடு ஒத்து நோக்கி, இயைபு முரண்பாடுகளை நடுநிலையில் ஆராய்வோம். வள்ளுவர் நூல், வேதசாரம், பலதரும சாத்திரத்தின் தெளித்தவடி என்பவரின் ஏதுவொடு சான்றுகளைத் தகவோடு நிறுத்துண்மை தேர்ந்து தெளிவோம்.

அகம் புறமென்றிரு வகையாய்ப் பொருளொன்றைத் திணை துறைகள் வகுத்துரைத்தல் தமிழ் மரபு. அதற்கு மாறாய், வள்ளுவர் நூல். அறமுதலாப் பால் வகுத்து வடவழக்குத் தொடர்புடைமை காட்டுதலால், தமிழ் முதனூலாகா தேன்.ப. அதன் உண்மை இனி விரித்திங் காராய்வோம். அறங்கூறக் காஞ்சி வாகை பாடாணின் துறைவகைகள் தமிழ் வழக்கி லென்று முண்டு. அறமெல்லாம் புறத்திணையிலடங்கி விழுப்பொருள் வகையாம்; பொருளின் பத்துறையிலாய்த் துரைப்பதறம். பொருளொன்றே. வாழ்வொழுக்க முறை பற்றி அகம் புறமென் றிருவகையாய், அறமுதல் நாற்பொருளடங்க அமையுமுண்மை தமிழர் கண்ட முடிபாகும். அது குறையென் றிகழ்ந்து நாற்பால் நெறி கூறின், முப்பாலென் றுரைப்பாரோ?

தமிழ்க் குறளை முப்பாலாய் வகுத்தவர் வள்ளுவர்தாம் என்பதற்குச் சான்றில்லை. "முப்பால்" என்றிறவாத குறளுக்கு வள்ளுவர் பெயரிடவில்லை. பண்டைச் சான்றோர் பாக்களைத் தொகுத்த பிற்காலத்தவர், தாமியற்றிய குறட் சிறப்புப் பாயிரத்தால் அப்பொருணுலை அறனுலாக்கி,