பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 263

முப்பாலாய்ப் பாராட்டி, ஆரியரின் நாற்பொருளும் அதாவது பொருளைக் கூறாமல், குறள் அரச நீதியே உரைப்பதாயும், அரச நீதி பொருளுக்குத் துணைக்காரணமென்றும் அது கூறப் பொருளடங்கும் என்றும் கூறினார். முப்பால் வகுக்க முயன்ற வள்ளுவர், பொருளைத் தெருளவுரையாமல், அதன் முதற் காரணத்தையு முற்றிலும் மறந்து, துணைக்காரன மொன்றே சொல்லி விடுவானேன்? பொய்யா விளக்காம் பொருளை விளக்க இயலாதியம்ப முயன்றிலார்? அன்றிப் பொருளைப் பொருட்படுத்தாமல் அரசநீதி விரிப்பதே அவர் கருத்தாயின், "ராசநீசாரம்" என்று பொருந்தப் பெயரிட்டிருக்கலாமே. இயற்றியோ ரெண்ண மெதுவேயாயினும் பொருளைக் கூறாக் குறளற நூலில் முப்பாலென்பது தப்பேயாகும். அரச நீதியும் காம முரைக்கும் 'இருபா லென்றேனும், வருணாச்சிரம நீதிச்சார காமரசங்களை வடித்துக் கூறும் 'ஒரு பால்' என்றேனும் கூறுதலன்றோ முறையாகும். அதைவிட்டு, “தருமமுதன் நான் கும்', 'முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்" என்று தப்பைக் கூறித் தடுமாறுவதேன்? உண்மையாதெனின் வள்ளுவர் நல்ல தமிழர். தமிழ் நூல் மரபிற் புலநெறி வழக்கினலம் நன்கறிந்தவர். அதனால் வடநூல் வழியில் அறமுதல் நாற்பால் வகுத்து நூலியற்றுங் கருத்தவற் கில்லை. அகமும் புறமுமா யிருவகைப்படும் பொருளை விரித்துத் தமிழ் நூல் செய்தார். - அதன் தனிப் பெருமையறிந்து அதைப் பின்னோர் நாற்பாற் பொருளும் வடநூல் முறையில் வகுக்கும் வழி நூலாக்க முயன்றோர் தங்கள் வழிக்கமையாத் தடைகளை விலக்க இல்லவும் பொல்லவும் பல்லாறாக விரித்தும் விலக்கியும் திரித்தும் உரைத்தார்.

இனி, முப்பாலாக வள்ளுவர் வகுத்தால், பொருளும் காமமும் பெரிதுடை நூலை, அவை குறியாமல் அறநூலென்பது தவறாமன்றோ? ஆகவே, வள்ளுவர் வாய்மொழி ஆரிய தரும சாத்திரமன்று, தமிழர் பொருணுால் என்பதே பொருந்தும்.

வள்ளுவர் குறளின் தனிமுதற் பெருமையை மறுப்பரெவரும், அது வடநூலென்றன் மொழிபெயர்ப் பென்றோ, இன்னநூலின் வழிவரு மென்றோ கூறுகின்றிலர். பொருட்டொகையாலும், முறைவகை யாலும் வடமொழிப் பரப்பில் குறள் போலெரு நூல் கூறுதற்கில்லை. பொருளிலும், வகையிலும் போக்கிலும், நோக்கிலும் ஒப்புக்கூறுதற்குரிய நூலொன்றும் இல்லா நிலையில் குறளை வழி நூலென்பவர் துணிவா? அதையப் படியே சொல்லித் திரியும் புலவரின் அறிவா? பெரிதென வியப்பளிதாகின்றது. திருக்குறளில் ஒரு நூற்றுமுப்பத்து மூன்றியல்கள் உள்ளன. ஓரியற் பத்துக் குறள்களையேனும் ஒத்தொரு வடநூல் உரைக்கக் காணோம். ஒரொரு குறட் கருத்தொத்து வருதொடரை ஒவ்வொரு நூலிடைக் கிளைத்துப் பொறுக்கி விழுக்குறள் மணிக்களுக்கது முழுமுதல் விதையெனச் சழக்குரை கூறி வழக்கும் தொடுப்பார். வியக்கும் காவியம் பயக்கும் கருத்தை முற்றிலுமொத்த சொற்சொடரமைந்து மேல்புலக் கவி