பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264. திருக்குறள் சொற்பொருள் கரபி

களில் மிளிரக் காண்குவம். அதனாலவற்றுள் ஒன்று மற்றதன் விதை முதலென்பது நகைக்கிடமன்றோ? குறட்கருத்தொத்துள வடமொழிக் கவிகள் குறளெழு முன்னே வழங்கியதுண்டோ? முந்திய வெனினும், வள்ளுவர் அவற்றைக் கண்டு தந்நூலிற் கொண்டாரென்னக் காட்டும் சான்றுகள் கேட்டதுண்டோ? இடமும் காலமும் தொடர்பிலப் புலவர் ஒத்த கருத்தைப் பல்வேறு மொழிகளில் உரைத்தோளிலரோ? அன்றியும், ஒழுக்கறமெல்லாம் என்றும் யாண்டும் ஒத்திருப்பது உலகியலன்றோ? ஓரளவொப்பவை ஒரு சிலவன்றிக் குறளறமனைத்தும் பிறமொழி நூல்கள் கூறக் கேட்பினும், அதனாலவைகள் ஒருமத வகுப்பார் பொது வழக்குரைப்பவை என்பது சாலாது. அறநெறி மக்களனைவரிடத்தும் ஒத்தமைந்திருப்பது உறவு சுட்டாது. அதற்கெதிராக வாழ்வற் மரபுகள் மாறுபடு நூல்கள், வேறின வகுப்பார் வழக்குரைப் பணவாய்க் கொள்வதே முறையாம். அகப்புற வாழ்க்கையில் மக்கள் மனையறம், தொழிற்றுறை, உரிமை, கடமைகள், வழக்கொடு கொள்கை வகைகளில் குறளும் தரும சாத்திரங்களும் கூறுமரபியல் நெறிகளை நிரலே ஒப்ப நோக்கி உண்மை காணுவம். ஆனால், உரைகள் புகுத்தும் புதுமைகளொழித்து, வள்ளுவர் சொல்லால் வருபொருள் மட்டே குறட்கருத்தாகக் கொள்ளல் வேண்டும்.

- முதலில், தமிழறமும், ஆரிய தருமமும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொல்லன்றென அறிதல் வேண்டும். தருமமும் என்பது, ஆரியர் நூல்கள் கூறிய நெறியியல் குறிக்கும் சொல்லாம். அதனால், ஆரிய தருமம், என்றும் யாவருக்கும் ஒத்தியலாமல் பிறப்பு, நிலை, பதவி, உத்தி யோகம், அவசியம், ஆபத்து, இடம் காலம் இவைகளுக்கேற்ப வேறுபடும்.

தமிழறம், எல்லோர்க்கும் எஞ்ஞான்றும் மாறாதமையும், இயல்முறை சுட்டும் அறத்தை நூல்கள் ஆக்குவதில்லை; ஆராய்ந்துரைப்பதே நூலோர் மேற்கோள்.

(ii) நூல்கள் விதிப்பதே தருமமாகையால், அது நூலோர் மதப்படி வெவ்வேறாகும். ஆதலால் குறைந்தது மநுதரும முதல் பராசரர் தருமம் வரை பதினெண் வகையில் ஒரு வகுப்பார்க்கே தருமம் பல திறப்படும். நூலோர் ஒப்பினும் ஒவ்வாவிடினும் அறத்துறை அனைத்தும் மாறாவியல.

(iii) இன்னும், தருமம், செய்யவும் தவிரவும் நூல் விதிக்கும் ஆணைகளாகும். அதனாலவைகள் அரசியலாரால் ஒறுப்பொடு வற்புறுத்தப்பெறும். 'அறம் வழக்கும் தண்டமுமான அரச நீதிகள் வேறுபட்ட பொது இயல் குறிக்கும். அறம் திறம் பல்பழிக்கன்றித் துண்டத்துக் காளாக்காது....... எனவே, வள்ளுவர் குறளும், வடநூல் தருமமா மாறில்லை.

இனி, பிறப்பாலுயர்வும் பீடிலாத் தாழ்வும் மக்களுக்கென்றும் மாறா நிலையில் சாதிகள் விதிக்கும் தரும சாத்திரம், சாதி என்னும் சொல்லும் கருத்தும் ஆரியர் மொழியும் மரபும் படைத்த அரும்பயிர் விளைவே.