பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 235

அதை அறவே மறுத்துப் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று முழங்கும் வள்ளுவர் தமிழ்க் குறள் பிறப்பாலுரிமையும், சாதி நீதியும் பேசாது மட்டுமல்ல; 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தும் கருமமே கட்டளைக் கல்" என்று தமிழர் கொள்கையையும் வரையறுக் கிறது. இரு பிறப்பாளர் மூவகை மக்களும் ஒரு பிறப்புடைய இருகாற் பொதி விலங்கொரு வகையாக்களும் தரும நூல் விதிக்கும் மாந்தர் வகை, முறை. இவ்வருண் தருமம் குறளறமறியாக் கொள்கையாகும். நிற்க.

மேலோர் மூவர்க்கும் நால்வேறு நிலையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுக்கும் ஆரிய தருமம். இதை ஆச்சிரம தருமம் என்னும் வடநூல். ஆச்சிரம உரிமை சூத்திரர்க்கில்லை. அதனால், கல்வி, இல்லற இன்பம், புலமைச் சிந்தனை, விடுதலை வாழ்வு என்னும் நானிலையுரிமை யும் நுகர்வும், பெரும்பாலோர்க்கு விரும்பினும் பிழையாம். வீட்டை விரும்பித் தவ மேற்கொண்ட சூத்திரன் பிழைக்க, அவனை, தளர்ந்த தருமத்தை வளர்க்க வந்த கடவுள் இராமனே கொன்று நிறுத்திய கதையால் ஆச்சிரம தருமத்தின் இயல்பும் வலியும் இனிது விளங்கும்.

கல்வி, மனைமாட்சி, தவம், துறவு என்னும் நானிலை வாழ்வும் எல்லா மாந்தர்க்கும் ஒத்துரிமையாக்கும் குறளறம். எனவே, நிறமொத்த வெண்ணெயும் கதையும் வேறாவது போலக் குறள் அறமும் ஆரிய தருமமும் இயல் மாறுபடும்.

தரும் சாத்திரப்படி ஓதல், மேலோர் சிறப்புரிமையாகும். பெரும்பாலோர்க்கது விலக்கப்பட்டது. எல்லார்க்கும் கல்வியை இன்றியமையாத பொது உடைமையாக்கும், குறள் கூறும் தமிழறம்.

இரு பிறப்பாளரல்லா ரெல்லார்க்கும் பொருளுரிமை மறுக்கும் தரும நூலனைத்தும்; இன்பமும் அறனும் எல்லா மீயும் பொருளாக்கம், மக்களுக்கெல்லாம் பொதுவுரிமை யென்னும் குறள்.

பிறப்பால் குலமுறை பேணி, அதன் வழி உணவும் மணமும் அறமும் விதிக்கும் தரும நூல்; சிறப்பால் குடி செய்து வாழும் பெருமை எல்லார்க்கு மியல்பென்னும் தமிழ்க்குறள்,

தொழில்களை மாந்தர்க்கு வருண முறையால் வகுத்து விதிக்கும் தரும நூல் செய்திறனும் வாய்ப்பும் உளதாயின், எவ்வினையும் எல்லார்க்கும் நன்றென்னும் குறள், பொருள், கருவி, காலம், இடம், திறனொடைந்தும் எண்ணி விரும்பு வினை மேற்கொள்ளும் நெறி குறிப்பதல்லல், பிறப்பும் பிறவும் எத்தொழிற்கும் விலக்கென மறுப்பதைக் குறள் கொள்ளாது.

உழவை இழிவாக்கி, ஆரியர்க்குப் பழியாய் விலக்கி, கீழோர்க்கும் விதிக்கும் தரும நூல்; தொழிற்கெல்லாம் உழவேதலை" என்றும் கோவேந்தர் கொற்றக் குடையும் தங்குடைக்கீழ் காண்பவராய உழவர் அரசரினுமயர்வுடைய பெரியாரென்றும் கோழைபடா மேழிச் செல்வம் எல்லார்க்கும் நல்லதெனவும் பாராட்டும் குறள்.