பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருக்குறள் சொற்பொருள் கரபி

மேலோர் மூவருள் முதல்வரான வேதியர்க்கு இரத்தலை உரிதாக்கி உழையா உஞற்றா உயர் தொழிலாக்கும் தரும நூல்.

தமக்கன்றி, ஆவிற்கு நீ ரென்றிரப்பினும் (மக்கள்) நாவிற்கிரவின் இளி வந்ததில் என்றெல்லார்க்கும் இரவிழிவாவதை குறள் கூறும். மேலும் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், அச் சிறுமையுடைய உலகியற்றியான் (படைத்த கடவுள்) பரந்து கெடுக என்றிரப்பிற்றமிழர் வெறுப்பை விளக்கும்.

உயிரும் மானமும் உடனோம்ப இடனில்லாக் காலை, மானத்தை விட்டு தம்முயிற் பேண விதிக்கும் தரும சாத்திரங்கள். 'உயிர் நீப்பர், மானம், கெடவரின் என்ற இளிவரின் வாழத் தமழரியல்புரைக்கும் குறள். குதினை ஆட்சியுரிமை மாட்சியுடைய இரண்டாம் வகுப்பார்க்கு மறுக்கொணாத்தரும மென்றும், மற்றவர்க்குப் பொருட்கேடல்லால் பழி பயக்கும் இழிவன்றென்றும் விதிக்கும் தரும நூல். செல்வமொடு பண்பும் கெடுத்து, அல்ல லுழப்பிக்கும் சூதை, எல்லார்க்கும் நல்வாழ்வின் வரியடைக்கும் தீதென்றதன் இழிதகவை வலியுறுத்தும் குறள்.

மெலியாரை நலிந்தவர் உரிமை பறிப்பது அரசர் சால்பென்று பாராட்டும் தரும சாத்திரம். இகல் மேவும் இன்னா அறிவு', 'எவ்வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் என்னும் குறள் இவ்வேறு பாடுகள் ஆழாது மேலளக்கும் அனைவருக்கும் புலனாகும். இன்னும் பல ஆழ்ந்து துருவி ஆராய்வார் சொல்லக் கூடும். ஆனாலும் தமிழ்க் குறள், ஆரியர் சாத்திர வரி நூலாகாமை காட்டுதற் கிவைசாலும். வடநூல் வழக்குகட் கெதிராகத் துறை தொறும் வேறாம் தமிழ் மரபு தெளிக்கும். "வள்ளுவர் நூல் தனி முதலாவதை மறுப்பாரறிவை என்னென்பது?

'ஆரியர்க்குரிய வேத வேள்வியை நிந்தனை செய்யும் சமண நூல் போலாது, தமிழ்க் குறள் ஆளாது வாளா அகல விடும் பெற்றிமை அறிந்து பாராட்டத்தக்கது. வள்ளுவர் பிறர் பழியும் தம்பழி போல் நாணும் தமிழ்ச் சான்றோராதலின், தமிழர் விரும்பா ஆரிய வழக்குகளைப் பழியா தொழிப்பர், புகழவுமாட்டார் சாற்றிற்றம் மாற்றலழிந் தொழியும் நான்மறையை, அந்தணர் நூல் என்றகற்றிப் பேசும் வள்ளுவர் 'ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று என்று வேள்வியை விலக்கும் தமிழ் மரபுரைப்பர். வெட்டென விளங்குமிவ்வுண்மை உணராமல் முட்டிமடியுமறிவின் முடவர். வைதிக தருமமும், பொது மறை யறமும் ஒன்றென நினைப்பர். தனித் தமிழ் மரபை நுனித்தறிந் துரைக்கும் முழுமுதற்றமிழ் நூல் வள்ளுவர் குறளெனக் கொள்ளுவர் வாய்மை வகையுணர் சான்றோர். வாழ்க தமிழ்க்குறள், வாழிய மாந்தர்!

- நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்