பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 289

இரு பகுதிகளையும் கற்பவர்தாம் மக்களாக வாழ்வர். பிறர் மாக்களாகி விடுவர் என முன்னறிவிப்புக் கொடுத்துள்ளார். இன்று கல்லூரிகளில் வள்ளுவர் கருத்துக்கேற்ப கலையும் (Arts) அறிவியிலும் (science) சேர்த்துக் கற்பிக்கத் திட்டம் வைத்திருப்பினும் செம்மையான முறையில் செயல்படவில்லை.

ஒருவனுடைய ஏற்றத்தாழ்வு அவன் போன பிறவியில் செய்துள்ள புண்ணிய பாவங்களுக்கேற்பவே உண்டாகும். சிலர் பல்லகில் (அக் காலத்தில் மகிழ் உந்து இல்லை) ஏறிச் செல்லுகின்றனர் என்றால் அவர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள். அதனைச் சுமந்து செல்பவர்கள் போன பிறவியில் பாவம் செய்தவர்கள் ஆவார்கள் என்று கூறி வந்தனர். இக் கூற்று மிகமிகக் கொடியது? உண்மைக்கு மாறுப்பட்டது. இன்று காண்கின்றோம். அறஞ்சாரா நெறியில் அளவு கடந்து பொருளீட்டியவர் அழகார்ந்த வியன் உந்தில் ஆர்ப்பரவுடன் செல்கின்றார். அறநெறி கோடாது வாழ்கின்றவர் அடக்கமாக நடக்கின்றார். வியன் உத்தில் வீறு தோன்றச் செல்லுகின்றவர் புண்ணியம் செய்தவர் என்றும், கால் நோவ நடந்து செல்லுகின்றவர் கடும் பாவம் செய்தவர் என்றும் கழறுதல் பொருந்துமா? பொருந்தாது அன்றோ? ஆகவே திருவள்ளுவர் அறத்தாறு இதுவென வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை எனச் சினந்து உரைத்தார். இதன் உண்மைப் பொருள்; பல்லக்கில் ஏறியிருப்பவரையும் அதனைச் சுமந்து செல்பவரையும் காட்டி இதுதான் அறவழியென்று கூறற்க என்பதாகும். பிற்காலத்தார் அவ்வுண்மைப் பொருளை மறைத்து வேறு வகையாகக் கூறி விட்டனர். ஏனெனில் உண்மைப் பொருளை அறிந்த மரந்தர் பல்லக்கில் செல்லுபவரை வாளா விட்டுவிட மாட்டார் என்று அஞ்சியே ஆகும். உண்மைப் பொருளுனரின் பல்லக்கில் செல்லுபவரைக் கீழே இறக்கிப் பல்லக்கைச் சுக்கு நூறாக உடைத்துத் தள்ளி விடுவரன்றோ.

கொடுத்தல் நன்றுதான். ஆனால், ஆளறிந்து கொடுக்க வேண்டும். சிலருக்குக் கொடுத்தால்தான் வீடுபேறு கிட்டும். வேறு சிலருக்குக் கொடுத்தால் நரகம் கிட்டும் என்றனர். கொடுத்தலால் வீடு அடைதல் போன்றே பெறுதலாலும், வீடு அடையலாம் என்ற கொள்கைப் பரப்பப்பட்டு வந்தது. ஆனால், பழந்தமிழர் கொள்கையோ இதனின்றும் வேறுபட்டது. ஈயென இரத்தல் இழிந்தது: ஈயேன் என்றால் அதனினும் இழிந்ததாகும்; கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தது; கொள்ளேன் என்றால் அதனினும் உயர்ந்ததாகும். இவ்வாறு கூறி ஒழுகி வந்தனர் பழந்தமிழர். திருவள்ளுவர் இத் தமிழ்க் கொள்கையில் ஊறி முதிர்ந்தவர். ஆகவே அவர் கூறினார். நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. பிறரிடம் ஒன்றைப் பெறுவது சிறந்த வாழ்வு நெறியாகும். (யாசகம் புருட இலட்சணம்) என்று சிலர் கூறினாலும் பிறரிடம் ஒன்றைக்கொள்ளுதல் கொடுங்குற்றமே. கெடுப்பதனால் வீடு கிட்டாது எனத் தெரிந்தாலும் கொடுத்தலே நல்ல செயலாகும்.