பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருக்குறள் சொற்பொருள் சுரபி

வீடு (மோட்சம்) கிட்டாது என்றாலும் கொடு, வீடு கிட்டுமென்றாலும் வாங்காதே என்பது எத்தகைய புரட்சிக் கொள்கையாகும் என்பதை எண்ணுமின்

வேள்விகளைச் செய்து ஆற்றலைப் பெறலாம்; அடைதற்கரியன வற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதல் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தனர்; பல வேள்விகளைச் செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தோன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும்.

அவ் வேள்விகளில் ஆடு மாடு குதிரைகளைக் கொன்றனர். மக்கள் நலன் அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா? போருளாளர் வள்ளுவர் தம் எதிர்ப்புக் குரலை எழுப்பினார். அரச சீற்றத்திற்கு ஆளாவோமே என்று அஞ்சினார் இலர். அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று என ஓங்கி முழங்கினார். வேள்விகளைச் செய்யாதே; வினில் உயிரைக் கொல்லாதே என்பது வியத்தகுப் புரட்சி அன்றோ? வேந்தரை எதிர்ப்பது அக் காலத்தில் சாகும் தண்டனைக்கு ஆட்படுத்துமே!

மாந்தர்களில் பலர் மனத்தின்கண் மாசு கொண்டு புறத்தில் மாண்புடையார் போன்று நடித்துப் பொய்க் கோலம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர். வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இவர்கள் பொது மக்களை ஏமாற்றித் தம் வலைக்குள் சிக்க வைத்துத் தாம் எண்ணியபடி ஆட்டி வைத்தனர். அவர்களால் பூசனையும் பொருளும் பூவையரும் பெற்றனர். அணிந்திருந்த வேடத்திற்கும் துணிந்திடும் செயலுக்கும் பொருத்தமின்றி ஒழுகி வந்தனர். வஞ்ச மனத்தினராய் கரவொழுக்கம் பூண்டு வாழ்வதைக் கண்டு அவர்களின் ஐம்பூதங்களும்கூட அகத்தே நகா நிற்கும். அக் காலத்தில் துறவிகட்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. துறவிகள் கடவுளைவிட உயர்ந்தவராகக் கருதப்பட்டனர். உண்மைத் துறவிகள் மக்களுக்காக உயிர் வாழ்ந்ததனால் அத்தகைய மதிப்பை அவர்கள் பெற முடிந்தது. எங்கு மதிப்பும் மாண்பும் கிட்டுகின்றவோ அங்குக் கயவர்கள் புகுவர் அன்றோ? ஆதலின் துறவிகளின் கூட்டத்திலும் கயவர்கள் புகுந்தனர். துறவிகள் போல் உருக்கொண்டனர். அக்காலத் துறவிகளில் சிலர் தலைமயிரை நீளமாக வளர்த்துச் சடையாகப் பின்னி, முடியாகக் கொண்டிருந்தனர். சிலர் தலைமயிரைப் போக்கி மொட்டையாக இருந்தனர். உண்மைத் துறவிகள் தலைமயிரால் அழகு செய்து கொள்ள விரும்பிலர். தலைமயிரைப் பேணாது விடின் சடையாய் பின்னலுறுவது இயல்பு. இதனைப் பொருட்படுத்தாது வாழ்ந்தனர் சிலர். சடைமுடித் தொல்லையைத் தாங்க