பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 274

இயலாதவர்கள் தலைமயிரைக் களைந்து கொண்டனர். இவர்களே மொட்டையாகக் காட்சி அளித்தவர்கள்.

கரந்துறை மாந்தர்கள் - துறவிகள் இவ்வாறு இருப்பதனால்தான் மதிப்புப் பெறுகின்றனர் என்று கருதினர். அவர்களில் சிலர் தலைமயிரைச் சடையாக வளர்த்தனர். சிலர் மழித்துக் கொண்டு மொட்டையாயினர். துறவிகள் போல் தோற்றம் கொண்டு நடித்தனால் பொது மக்கள் மயங்கி அவர்களைப் பூசித்துப் பொன்னும் பொருளும் அளித்துப் போற்றினர். அவர்களோ போலித் துறவிகள்: தவம் மறைந்து அல்லவை செய்தனர். பெற்றம் புலித்தோல் போர்த்திப் பசும் பயிரை மேய்வதுபோல் அஞ்சத்தகும் வடிவம் பெற்றுத் துறவிப் போல் காட்சி அளித்து நெஞ்சில் துறவாது படிற்றொழுக்கம் கொண்டிருந்தனர். திருவள்ளுவர் அவர்கள் வாழும் முறையைக் கண்டு வெறுப்புற்றார். இத் துறவிகளை அவர்களுடைய செல்வாக்கினைக் கண்டு அஞ்சது எதிர்க்கத் தொடங்கினர். மன்னரினும் வலிமை வாய்ந்த அவர்களைக் கண்டு வள்ளுவர் அஞ்சினார் இலர். உலகம் - உயர்ந்தோர் - பழிக்கும் குற்றங்களை நீக்கி வாழ்ந்தால் அஃதே உயர்ந்தோர் ஆக்கும்; சடையை வளர்த்தலும் மொட்டையடித்தலும் எற்றுக்கு? என்று அவர்களை நோக்கி அறைகூவல் விடுத்தார். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்,

மகளிர் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கிய முதல் புரட்சியாளரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத் தக்கன. மனைவியை வாழ்க்கைத் துணை என முதல் முதலாக அழைத்தவரும் அவரே. கணவனும் மனைவியும் நண்பர் போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண் மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே. ஒருமை மகளிரே போல் பெருமையும் தன்மைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவி யால் தான் என மகளிரை உயர்த்திக் கூறினார். இவ்வாறு மகளிரை உயர்வுப் படுத்தும் வள்ளுவர் மகளிரைச் சிறுமைப்படுத்தினால் வாளாயிருப்பாரா?

சிலர் தம் மனைவியின்பால் ஐயங்கொண்டு தாம் இல்லாத காலத்தில் கெட்டுவிடுவாள் என்று அஞ்சி, தம் இனிய நல்வாழ்வுத் துணையைக் காவலுக்கு ஆட்படுத்தினர். வீட்டினுள் பூட்டி வைத்தனர். மகளிர் விரும்பின் எக் காவலையும் கடந்து எதனையும் செய்யும் ஆற்றலுடையவர். இதன்ை அறியாது ஏன் அவர்களைச் சிறுமைப் படுத்திச் சிறையிட வேண்டும்? அவர்கள் உள்ளத்தை அறிந்து உள்ளம் ஒன்றுபட வாழ முற்படின் அவர்களே தம்மைக் காத்துக் கொள்வர். ஆதலின் திருவள்ளுவர் ஆடவரை நோக்கிச் சிறைகாக்கும் காப்பு என்ன செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என்று கழறினார்.