பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அமைந்தார் = கணவனாக அமைந் தவரது அல்லது காதலரது, (1155). அமைந்தின்று = அமைந்தது இல்லை;

அமையவில்லை, (340). அமைந்து = தன்மைகளால் நிறைந்த தென, (118); சமாதானப்பட்டு பொருந்தியென, (474); நிறைந்தது என்று, (761). அமையல இருக்க முடியவில்லை;

மனநிறைவில்லை, (1283). அமைய வாழ முடியாத',

இல்லாமல் இயலாத, (961). அமையக் கடை = ஏற்றுக் கொள்ளாத இடத்தில்; உடன் படாத விடத்து, (803). அமையாத - முடியாத, (632);

பொருத்தமில்லாத, (825). அமையாது = நடக்காது; முடி யாது,

(20). அமையார் அமை+ஆர் மூங்கில்

போன்ற, {906). அமையும் = உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற் குப் போதுமானது, (708); ஏற்புடையது, (1193), அமைவர் = பழகுபவர், மேவுவர்,

(580). . அமைவில= பொறுக்கின்றில, (1178).

அமைவிலன் - பொருத்தம் இலன், -

(862).

அமைவிலாத = பொருத்தமில்லாத,

(740).

அமைவு = பொருந்துதல்; மேவு தல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும், அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின, (740); மிகுதி, (743); அமைதல், (1178).

திருக்குறள் சொற்பொருள் கரபி

அமைவுஇலன் = மற்றவர்களோடு

பொருத்தம் இலன், (863).

அம் = அழகிய, (1107).

அம்பினில் = அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772).

அயர்கம் = உண்போமாக, செய்

வோமாக, (1268).

அங்கு = இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு, அறு என்னும் அடியாகப் பிறந்தது; அவ்வாறானால் கோடு

அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை, அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே, அரங்கு தமிழ்ச் சொல்லே.

அரங்கு என்றால் சூதாடு

கோடுகள்; சதுரங்கக் கோடுகளை யும் பொருள் குறிக்கும். சூதாடு களம், (401), அரசர் = வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ராஜா என வழங்கு கிறது என்பது ஆய் வாளர் முடிபு. அரண்களை உடை யவன்தானே அரசன்? அரசு = அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமை கள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப் பட்டிருப்பதைக் காணலாம். அரண் = கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (534). அரம் = அராவும் கருவி, (567, 888,

997). -