பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

37

அன்பின் - அன்பினுடைய (79) அன்பின் காரணமாக, (911).

அன்பீன் : அன்பினின்றும் தோன்றிய, அன்பினால் பெறப் பட்ட, (757).

அன்பு = அனைவரிடத்தும் காட்டும் அன்பு, (45); உறவினர்களிடம் காட்டும் அன்பு, (74); தன்னைச் சேர்ந்தவரி டம் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி, (76, 78, 79, 80, 513, 681, 682, 807, -983, 1009).

அன்புடைமை = மன்னனிடத்தில் அன்புடையவராய் இருத்தல், (681); எல்லாரிடமும் அன்பு டையவராய் இருத்தல், (992).

அன்புடையராதல் = அருளின் மேல் அன்புடையராதல்' - பரி மேலழகர் உரை; உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக் குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும் பண்பு" - நாவலர் உரை "அரு ளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு

நடப்பதென்பது - திருக் குறளார் முனிசாமி உரை, (285).

அன் நடையர் :: அன்பைப் -

பெற்றவர், (72). அன்புற்றமர்ந்த வழக்கென்ப = 'அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்' - பரிமேலழகர்; "முற் பிறப்பின்கண் பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர்,

(75).

அன்பொடும் = குடிமக்கள் தங்களுக் காகக் காட்டும் அன்பொடு, (755). அன்போடியைந்த = அன்போடு பொருந்துவதற்கு வந்த, (73). அன்மை = வேறாதல், (162); அல்லாமை, (172); இன்மை, (185). அன்றி = இல்லாது, (437, 947). அன்று = பின்பு, (36); இல்லை, (82); அப்பொழுதே, (108); அல்லாத, (379); அன்று, மிக்கது, (438). அன்றே = அப்பொழுதே, (108,

113); அல்லவோ, (555). அன்ன - போன்ற, (109); ஒத்த, (296, 308, 363, 527, 889, 1071, 1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1294, 1305). அன்ன ஒப்பார் = போல ஒத்திருப்

பவர், (1071).

அன்னது போன்றது, (565,

1082).

அன்னம் = அன்னப் பறவை,

(1120).

அன்னர் = போன்றவர், ஒப்பான

வர்கள், (1076). அன்னள் வாழ்தலோடு ஒத்தவள்,

(1124). அன்னர் = போன்றவர் (667, 814, 889, 969, 1061); போல, ஒற்றுமை யுடையவர், (1323). அன்னான் = எருதுபோல, தடை களைக் கடந்து தளராமல் நடைபோடும் வல்லவன், (624).

அன்னை = பெற்ற தாய், (1147).