பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

51

ஆய்வுரைகளைத் திருவள்ளு வரது அடிப்படைக் கருத்துக்கு மாறாமல் எழுதினார்களே தவிர, இந்திரன்தான் அந்தணன்; அதற்கு அவரே சாட்சி, மோட் சத்திற்கு விதை என்று மேற்கண்ட உரையாளர்கள் எவரும் வாசகர்கள் மீது அடித்துத் திணிக்கவில்லை என்பதே உண்மை!

ஆனால், சாஸ்திரி, திருக்குறள் அதிகாரத்தில் வரும் 10-வது குறளான 'அந்தணர் என் போர் அறவோர்' என்ற குறளை, சாஸ்திரி தனது பாலர் உரையில் 9-வது குறளாக இடம் மாற்றி வைத்து 10-வது குறளாகத் திருக் குறளின் 4-வது பாடலான 'உரனென்னுந் தோட்டியான்' எனும் பாடலை, தனது நீத்தார் பெருமை அதிகார உரையை இறுதியிலே வைத்து முடித்துள் ளார். என்ன காரணம் இதற்கு?

இந்திரனே அந்தணர்; அவரே உயர்ந்தவர்; பிறரால் செய்ய

முடியாதவற்றை எல் லாம்

இந்திரனே செய்வார்; அவர் கோபத்தின் பயனை யாராலும் தடுக்க முடியாது என்ற பண்பு களது பெருமைகளை, இந்திரன் மேலே திணித்து அவரை அந்தணர் என்பதை உலகில் நிலை நாட்டஅரும் பாடுபட்டுள் ளார் உரை வித்தகரான சாஸ்திரி.

சாஸ்திரி கூற்றுப்படி அந் தணர் தானா இந்திரன்? மற்றெவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவரா இந்திரன்? குணநலனே சான்றோர் நலம் என்ற பண்பு நலமுடையவரா இந்திரன்? சான்றோர்களுக்குரிய அற ஆழி, அன்பு ஆழி, அருள் ஆழி, அறிவு ஆழி, பண்பு ஆழி

இவற்றுள் என்ன ஆழியை வென்றவர் இந்திரன் என்பதைச் சாஸ்திரி விளக்கியிருக்க

வேண்டாமா?

இந்திரன் ஒழுக்க ஆழி பற்றி கம்பர் பெருமான் 'அகலிகை’ப் படலத்தில் பாடுவதைப் பரிசீலனை செய்து பாருங்கள். இதோ கம்பர் தனது இராம யணத்தில் பாடும் பாடல் :

துறவி கெளதமரின் துணைவி அகலிகை. இந்திரன் அவளைப் பார்த்தான்; பாற்கடல் கடையும் போதே. அன்று முதல் அவள் மீது அவனுக்குக் காமம். ஒரு நாள் அந்தத் தையலாள் நயனவேலும் மன்மதன் சரமும்பாய, மையலேறிய தேவர் கோமான் இந்திரன்; கெளதமன் உருவில் அகலிகை குடிலில் புகுந்த இந்திரன் அந்தண்னாகும் தகுதி உடை யவனோ? ஒழுக்க ஆழி பற்றிப்

பேசும் சாஸ்திரி இதைச் சிந்திக்காததேன்?

புகுந்தான் காமக் கள்ளன்

இந்திரன் - அறிவன் கெளத மன் குடிலில், இதோ, கம்பர் அந் நிகழ்ச்சியை பாடுவதை ரசியுங் கள் - இந்திரன் மோட்சத்திற்கு விதையானவன் தானா என்று?

"புக்கவ ளோடும் காமப்

புதுமண மதுவின் தேறல் ஒக்கவுண்டு இருத்த லோடும்

உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் - தக்கதன் றெண்ண ஓராள்

தாழ்ந்தனள் இருப்பத் தாழா முக்கணன் அணைய ஆற்றல்

முனிவனும் முடுகி வந்தான்' கணவனில்லாத குடிலில், புகுந் தவளோடு, அதாவது