பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இருவேறு இரண்டு வகை வேறு

பட்ட் இயற்கை முறைகள், (374). இருள் = அறியாமை, மயக்கம், (5): துன்பம், நரகம் என்றும் சிலர் கூறுவர், (121, 352); அறியாமை இருள், (243); குற்றமற, (675); இடுக்கண் களை, துன்பங்களை, (753).

iசேர்ந்த இருட்டுடைய,

{243). இரையன் = இரை என்பது மிருகம் தின்னும் தீனி. மனிதன்

அளவோடு உண்பது உணவு. இரையான் அதிகம் உண்ணும் மிருகம். அதனால் இரையான் எனப்பட்டான், (946). இல = இல்லை; உளவாகா, (4): உடையனவல்ல, (9, 39); பய னில்லாத சொற்களை, {191); நீதியில்லாத செயல்களை, (192); உடைத் தாயிருக்க வில்லை ,

(193); பயனற்ற, (195, 196, 197); இல்லாதவும், (696); இல்லாதவற்றை, (697, 956,

998); உடைய அல்ல, (1100); இல்லையாயின, (1178).

இலக்கம் = குறியிடம், இலக்கு,

(627). இலங்கிழாய் = விளங்குகின்ற நகை

களை அணிந்த தோழியே, (1262).

இங்கு = விளங்குகின்ற,

மேன்மையான, (410, 1262).

இலதனை = அன்பு இலாத, என்பு இல்லாத, (77); வினையை, தெளிவில்லாத தொழிலை, (464); பண்பிலாதனை, தீமை தருகின்ற, (871).

இலது = இல்லாதது, இல்லாதவன்,

(586).

திருக்குறள் சொற்பொருள் கரபி

இலம் = பொருளின்றி, வறுமை யுற்றவர் ஒரு பொருளும் இல்லாமல் ஏழ்மையராய் இருக்கிறோம், (10.40). இலரே = இல்லாதவரே, (728). இலர் = இல்லாதவர், (114, 365): ஏழைகள், (270), இல்லாத வராவார், (409, 430, 499, 506, 778, 954, 1242, 1325); இலராதலான், (1072); இல்லாராவர், (1094). இலவர் = இல்லாதவர், (607). இலவர்க்கு = இல்லாதவர்க்கு, (79);

இலர் ஆயினார்க்கு (604).

இலவம் = இலாவயிருக்கின்ற,

(91).

இலனாகும் = ஏழையாயிருக்கும்

நிலை, (205).

இலன் என்றது தன்மை ஒருமை யாயின், அன்னிற்றுத் தன்மை ஒருமை. தொல்காப்பியத்திற் கூறப்படவில்லை. அதனால் திருக்குறள் தொல்காப்பியத் திற்குப் பிற்பட்டது என்பவர் காட்டும் சான்று இது. 'இலன் என்ற சொல்லுக்குத் தான் என்பதை எழுவாயாகக் கொள்ளின் தன்மையொருமை எனக் கொள்ளல் வேண்டாம். ஆயினும், இரப்பனிரப்பாரை' என்ற 1057-ஆவது குறளை என்னுமிடத்து இரப்பன் எ ன்பதைத் தன்மையொருமை யாகவே கொள்ள வேண்டி யுள்ளது. அதனையொட்டி ஈண்டுத் தன்மையொருமை யாகக் கொள்ளின் குற்றமாகாது’ என்று அறத்துப் பால் பாலருரை யில் டாக்டர் பி.எஸ். சுப்பிர மணியம் குறிப்பிட்டுள்ளார்.