பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

63

மாட்சிமைப்பட்ட செயல்களைப் பற்றிக் கூறுதல். இது திருக்குறள் 39-ஆவது அதிகாரமாகும்.

இறைவற்கு = அரசனுக்கு, (690,

733).

இறைவன் = கடவுள் என்பர் சிலர், (5).

இறை என்ற சொல், இறை வன், அரசன், தலைவனையே முதலில் குறித்து வந்த சொல். நாளடைவில் அது கற்பனைக் கடவுளுக்குப் பயன்படுத்தப் பட்டது. அரசன் வாழ்ந்த அரண் மனையைக் குறித்த கோயில் என்ற சொல்லே பின்னர் கற்பனைக் கடவுள் நிலை நாட்டப்பட்ட இட்த்தையும் குறிக்கும் சொல்லாக ஆயிற்று என்று நாவலருரை கூறுகின்றது. அதற்கு நாவலருரை வழங்கும் எடுத்துக் காட்டுகள் :

'மக்கட்கு இறையென்று வைக்கப்படும். குறள் 388. இறை என்பது தலைவன் என்ற பொருளில் வருகிறது.

காக்கும் வையகம்

எல்லாம்'. குறள் 547. இறை

என்பது அரசன் என்ற பொருளைக் குறிக்கிறது.

'ஒர்ந்து கண்ணோடாது இறை புரிந்து'. குறள் 541. இறை புரிந்து என்பது அரசனது நடு நிலைத் தன்மையைக் குறிக்கிறது. 'இறை கடியன் என்றுரைக்கும் இன்னாச் சொல்'. குறள் 564.

இறை என்பது அரசனைக்

குறிக்கிறது. 'இறைவற்கு, இறையொருங்கு

நேர்வது நாடு'. குறள் 733.

இறைவற்கு இறை என்பது அரசனுக்குச் செலுத்தும் இறைப் பொருள் என்று பொருள் படும்.

'இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது’. குறள் 690. இறை வற்கு என்பது அரசனுக்கு என்று பொருள்படும். 'இறைவன், செறினும் சீர்குன்றல் இலர் குறள் 778, இறை வன் என்பது அரசனையே குறிக்கும் என்று சுட்டுகின்றது நாவலருரை. திருக்குறள் முதல் அதிகாரத்தை உரையாசிரியர்கள் அனைவரும் 'கடவுள் வாழ்த்து' என்றே கூறுகிறார்கள். திருக்குறளார் முனிசாமி உரை : முதல் அதிகாரத்தை 'கடவுள் வாழ்த்து' என்று தலைப்பிட்டு விட்டு, அதனடியில் இறை வனது பண்புகள், வழிபாடுகள், பயன் முதலியவற்றைக் கூறு தல் என்று குறிப்பிடுகிறது. ஆனால், நாவலருரை கடவுள் வாழ்த்து எனப்படும் முதல் அதிகாரத்தை 'அறிவன் சிறப்பு' என்று சுட்டுகிறது. அதற்கு அவர் கூறும் காரணம். அறியாமை உலகத்திலிருந்து அகன்று, அறிவுடைய பயன்படும் உலகத் திற்கு மக்களை அழைத்து வரு வதற்கு முன்னோடியாக இருந்து, அறிவாலும், ஆற்றலாலும், பண்பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக் கூடிய அறிவனின் சிறப்புப் பற்றிக் கூறுதல் என்று கூறுகிறது. 'இறை மாட்சி' என்ற அதிகாரத் திற்கு திருக்குறளார் உரை கூறும் போது : நாட்டிற்குத் தலை வனான மன்னனைப் பற்றிக் கூறுதல்' என்கிறார். இறை என்ற சொல்லுக்கு அவர் கடவுள் என்ற சொல்லையே எங்கும் குறிப்பிடவில்லை என்பது சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.