பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

77

உளபோல இருப்பதுபோலத்

தோன்றி, (4:79). உளபோல் = இருக்கின்றன போல,

(574). உளராகார் = அழிவார்; பிழைக்க

மாட்டார், (895). உளர் = கை சிட்டிகை ஒலி நேரம் உயிரோடு இருக்கின்றார் என்ற அளவினரே அல்லாமல், (406, 730, 1178, 1204). உளர் அல்லர் = நிலைபெறு கின்றவர் அல்லர் அதாவது இறப்பர் (880). உளவரை = தனது பொருள் உள்ள

அளவு, (480). உளன் = இருக்கின்றான், (294, 336). உளவாக = தன்னிடத்தில் இருக்க,

(100). உளர் இருப்பவர் வாழ்பவர், (25). உளள் = உறைவாள்; வாழ்வாள்;

இருப்பாள், (617). உளி = நீதி நூல் முறைப் படி: மூன்றவதன் பொருள்படுவதோர் அடைச்சொல்; பால்; மூன்றாம் வேற்றுமை உருபு, (545). உருளம் = இருக்கின்றேனா? இல்லையோ? தெரியவில்லை, (1204). உளேன் = இருக்கின்றேன், (1167); உயிர் வாழ்கின்றேன், (1206); உயிரை வைத்துக் கொண் டிருக்கின்றேன், (1263). உள் = இடத்தில், (50); மனத்தில், (129); (உட்புகுந்து அழிக்க முடியாத - மணக்குடவருரை1, (421); உள்ளம், (487, 680); உள்ள தன்மை, (677); உள்ளாய் நிற்கும், (735); மனம், (927); உள்ளிடம், 1955, 1177, 1274, 1324).

உள் ஊர் =. ஊர் உள்ளே; நடு ஊர்; உள்ளுரில் இருப்பவரால், (927). உள் ஒற்றி = உள்ளே நடப் பதை

அறிந்துணர்ந்து, (927). உள் வீழ்ந்தக் கண்ணும் = சுருங்கிய

கண்ணிடத்தும், (955). உள்ள = நினைக்க, (109, 357, 540, 622, 1069, 1206, 1281); எவ்வாறு இவரை இனி எங்கு சந்திப்போமென்று எண்ணு மாறு, (394); ஊக்க, (600, 971). உள்ள உளேன் = நினைத்துக் கொண்டிருப்பதால் உயிர் வாழ்கின்றேன், (1206). உள்ளங்கொளல் = கருத்தைத் தான

அறிய வேண்டும், (677). உள்ளதாம் = உள்ளதாகும், (889). உள்ளது = இருப்பது, (53, 1091); இடத்து, (255), மெய்ப் பொருள், (357); நிகழ்வது, (572). உள்ளது உம் = அடங்குவதும், (641), கரைந்து உள்ளதும்; சேர்ந்ததும், (982); கரைந்து நின்ற உள்ளமும், (1069). உள்ளத்தார் = உள்ளத்தில் இருப்

பவர், (1249). உள்ளத்தால் = மனத்தால், (282); மனத்திற்கேற்ப, (294); மனத் தால், (309). உள்ளத்தின் = மனத்திலே, மனத்

தினாலே, (622).

உள்ளத்து = ஊக்கத்தின், (595).

உள்ளத்துள் = மனத்தில் (294,

1130).

உள்ளப்படும் மதிக்கப்படும், (665).

உள்ளம் : மனம், (357, 677, 799, 1057, 1069, 1170, 1207); ஊக்கம், (592, 798, 1263).