உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இனியவை கூறல் இனிமையான சொற்களைப் பேசுதல். முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானும் இன்சொ லினதே அறம். (ப-உ) அறம்-தருமம் எனப்படுவது, முகத்தான்-(தம்மிடம் வருபவரைக் கண்டதும்) முகமலர்ச்சியுடன், அமர்ந்து-விரும்பி, இனிது நோக்கி-இனிமையாகப் பார்த்து, (பின் அவர் நெருங்கி வந்ததும்) அகத்தான் ஆம்-மன மலர்ச்சியுடன் உண்டாகும், இன் சொலினதே-இன்சொல்லினிடத்தேயே உள்ளதாம். (க.உ) தம்மை நாடி வந்தவரிடம் முகமலர்ந்து இன்சொல் சொல்லுவதே சிறந்த அறம். அறம்-எழுவாய் ; இன்சொலினதே-பயனிலை. 8. செய்ந்நன்றி அறிதல் தமக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து) அன்றே மறப்பது நன்று. (ப-உ) நன்றி-தமக்குப் பிறர் செய்த நன்மையை, மறப்பது-மறந்து விடுவது, நன்றன்று-நல்லதன்று. நன்று அல்லது -தமக்குப் பிறர் செய்த நன்மை யல்லாத தீமையை, அன்றேசெய்த அப்பொழுதே, மறப்பது-மறந்துவிடுவது, நன்று-நல்லது. (க.உ) பிறர் செய்த நன்மையை மறக்காமல், தீமையை மட்டும் மறந்துவிட வேண்டும். நன்றிமறப்பது-எழுவாய்; நன்றன்று-பயனிலை. அன்றே மறப்பது-எழுவாய் ; நன்று-பயனிலை. 10