பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நடுவு நிலைமை எல்லோர்க்கும் பொதுவாக நடக்கும் தன்மை, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்(கு) அணி. (ப-உ) சான்றோர்க்கு-பெரியோர்க்கு, அணி-அழகாவது, சமன் செய்து-முதலில் தன்னைச் சமமாக வைத்துக் கொண்டு, சீர்துக்கும்-பின்பு தன்னிடத்தில் வைக்கும் சுமைகளின் ஏற்றத் தாழ்வுகளைத் தெரிவிக்கும், கோல்போல்-(தராசு) துலாக் கோலைப்போல, அமைந்து-முதலில்,பெரியவர்களாகிய தாங்கள்) உண்மையுடையவராய் இருந்து, ஒருபால் கோடாமை-ஒருவர்க்கு ஒருவிதமாகவும் மற்றெருவர்க்கு மற்றெரு விதமாகவும் நடவாமல் நடுவாக நிற்றலாம். (க-உ) பொதுவாக நடப்பதே பெரியோர்க்கு அழகு. அணி-எழுவாய் ; கோடாமை-பயனிலை. 10. அடக்கம் உடைமை அடக்கம் உடையவராய் இருத்தல். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். (ப-உ) அடக்கம்-அடக்கமான குணம், அமரருள் உய்க்கும். (தன்னை உடையவனைத்) தேவர் உலகத்தில் கொண்டுபோய்விடும். அடங்காமை-அடங்காத தன்மை, ஆர் இருள்-நிறைந்த நரகமாகிய இருட்டில், உய்த்துவிடும்- கொண்டுபோய் விட்டுவிடும். (க.உ) அடக்கம் உடையவருக்குச் சுவர்க்கமும், அடக்கம் இல்லாதவருக்கு நரகமும் கிடைக்கும். அடக்கம்-எழுவாய் ; உய்க்கும்-பயனிலை. அடங்காமை-எழுவாய் ; உய்த்துவிடும்-பயனிலை. 11