பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒழுக்கம் உடைமை நல்லொழுக்கம் உடையவராய் இருத்தல். ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும். (ப.உ) ஒழுக்கம்-நல்நடத்தை, விழுப்பம் தரலால்-உயர் வைக் கொடுப்பதால், ஒழுக்கம்-அந்நல் நடத்தை, உயிரினும்உயிரைக் காட்டிலும், ஒம்பப்படும்-பாதுகாக்கப்பட வேண்டிய தாகும். (க.உ) ஒழுக்கம் உயிரிலும் உயர்ந்தது. ஒழுக்கம்-எழுவாய் ; ஒம்பப்படும்-பயனிலை. 12. பொறை உடைமை பொறுமை உடையவராய் இருத்தல். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (ப-உ) அகழ்வாரை-தன்னைத் தோண்டுகின்றவர்களை, தாங்கும்-கீழே விழாமல் தாங்குகின்ற, நிலம்போல-பூமியைப் போல, தம்மை-தங்களே, இகழ்வார்-இகழ்பவர்களே, பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல், தலை-முதன்மையான அறமாகும். (க.உ) தம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நல்லது. பொறுத்தல்-எழுவாய் ; தலை-பயனிலை. 12