உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. இன்னா செய்யாமை பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமை. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். (ப-உ) மாசு அற்றார்-குற்றம் அற்ற பெரியவர்களின், கோள்-கொள்கையாவது, (பிறர்க்குத் துன்பம் செய்வதால்) சிறப்பு ஈனும்-பெரிய உயர்வைக் கொடுக்கக்கூடிய, செல்வம் பெறினும்-செல்வங்களைப் பெறலாம் ஆனாலும், பிறர்க்கு-பிறருக்கு, இன்னா செய்யாமை-துன்பம் செய்யா திருத்தலேயாம். (க.உ) தம் நன்மை கருதிப் பிற உயிர்க்குத் துன்பம் செய்யலாகாது. கோள்-எழுவாய் ; இன்னா செய்யாமை-பயனிலை. 22. இறை மாட்சி அரசனது பெருந் தகுதி. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவற்கு. (ப.உ) நிலன் ஆள்பவற்கு-பூமியை ஆளும் அரசனுக்கு, துங்காமை-சோர்வுஇல்லாமை,கல்வி-படிப்பு,துணிவு உடைமை -துணிச்சல் உடைமை, இம்மூன்றும்-என்னும் இம்மூன்று தகுதிகளும், நீங்கா-நீங்காமல் இருக்க வேண்டியவை. (க-உ) தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் மூன்றும் அரசனுக்கு இருக்கவேண்டியவைகள். மூன்றும்-எழுவாய் ; நீங்கா-பயனிலை. 17