பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. குடிமை உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவரின் தன்மை. நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (ப-உ) நிலத்தின்-பூமியினுடைய, கிடந்தமை-தன்மையை, கால்-அப்பூமியில் முளைத்த முளை, காட்டும்-தெரிவிக்கும்.(அது போல) குலத்தில்-ஒரு குடும்பத்தில், பிறந்தார்-பிறந்தவருடைய, வாய்ச் சொல்-வாயிலிருந்து வரும் சொற்கள், காட்டும்-அக்குடும்பத்தின் தன்மையைத் தெரிவிக்கும். (க-உ) ஒருவரின் பேச்சைக் கொண்டு, அவர் பிறந்த குடும்பத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். வாய்ச் சொல்-எழுவாய் ; காட்டும்-பயனிலை. 48. மானம் தாழ்வைப் பொறுக்காத மானத்துடன் வாழ்தல். தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. (ப-உ) மாந்தர்-மனிதர், நிலையின்-தமக்குரிய உயர்ந்த நிலையிலிருந்து, இழிந்தக்கடை-தாழ்ந்த சமயத்தில், தலையின் இழிந்த-தலையிலிருந்து கீழே விழுந்த, மயிர் அனையர்-மயிரைப்போல் தாழ்வாகக் கருதப்படுவார்கள். (க.உ) ஒருவர் தமக்குரிய உயர்ந்த குணத்திலிருந்து தாழ்ந்தால் இழிக்கப்படுவார்கள். மாந்தர்-எழுவாய் ; அனையர்-பயனிலை. 30