பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. பெருமை பெருந்தன்மை. பிறப்பொக்கும் எல்லை உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (ப-உ) எல்லா உயிர்க்கும்-எல்லா மனித உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும்-பிறக்கும்முறை ஒன்றாகவே இருக்கும். (ஆனால்) செய்-செய்கின்ற, தொழில் வேற்றுமையால்-தொழில்களின் வேறுபாட்டினால், சிறப்பு ஒவ்வா-பெருமைகள் ஒத்திருக்கா. (க-உ) செய்யும் தொழிலுக்குத் தக்கபடியே பெருமை சிறுமைகள் உண்டாகும். பிறப்பு-எழுவாய் ; ஒக்கும்-பயனிலை. சிறப்பு-எழுவாய் ; ஒவ்வா-பயனிலை. 50. உழவு பயிர்த் தொழிலின் தன்மை. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (ப-உ) உழுது-உழுது பயிர் செய்து, உண்டு-அதனல் தாங்களும் சாப்பிட்டு, வாழ்வாரே-வாழ்பவர்களே, வாழ்வார்-சுதந்தரமாக வாழக்கூடியவர்கள். மற்று எல்லாம்-மற்றையோர் எல்லோரும், தொழுது-பிறரைப் பணிந்து, உண்டு-அதனால் தாம் சாப்பிட்டு, பின் செல்பவர்-பிறர்பின்னே திரிபவர் ஆவார்கள். (க-உ) உழவுத் தொழிலே உயர்ந்த தொழில். வாழ்வாரே-எழுவாய் ; வாழ்வார்-பயனிலை. மற்றெல்லாம்-எழுவாய் ; பின் செல்பவர்-பயனிலை. தெளிவுரை முற்றிற்று.

31