பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் பெண்வழிச் சேறல் பெண்வழி நடப்பவர் பெரும்பயன் அடையார்; காரியம் விரும்புபவர் அங்ங்ணம் நடவார். காரியம் பேணாமல் மனைவிவழி நடப்பவனது மேன்மை பெரிய வெட்கத்துக்கு உரியதாகும். மனைவிக்குப் பணிந்து நடக்கும் போக்கு என்றும் அறிஞரிடை வெட்கம் தரும். மனைவிக்கு அஞ்சுபவன் மறுமை இழந்தவன்; அவன் காரியத்திறம் சிறப்பு அடையாது. மனைவிக்கு அஞ்சுபவன் நல்லவர்க்கு நல்லது செய்ய என்றும் அஞ்சுவான். மனைவியின் அழகிய தோளுக்கு அடங்கியவர் தேவர்போல வாழ்ந்தாலும் சிறப்பில்லை. மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட நாணமுன்டைய பெண்ணே மதிக்கத்தக்கவள். நல்ல நெற்றியுடையவள் சொற்படி நடப்பவன் நண்பர்க்கு உதவான் நல்லதும் செய்யான். மனைவி ஏவக் காரியம் செய்வாரிடத்து அறமும் பொருளும் இன்பமும் இரா. சிந்தனை செறிந்த மனத்திட்பம் உடையார்பால் மனைவி சொற்படி நடக்கும் மடமை இராது. 184 901 9 32 903 904 905 906 90.7 908 90.9 நட்பியல் அதிகாரம் 91 பெண்வழிச் சேறல் மனைவிழைவர் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. 90% பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நானாக நாணுத் தரும். 902 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நானுத் தரும். 903 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று. 904 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். 905 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். 906 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. 907 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். 908 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் ன்ே క్ట్ 909 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 90 185 13