பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் வரைவின் மகளிர் (பரத்தை) அன்பின்றிப் பொருளை விரும்பும் பரத்தையரின் நயமான சொல் துன்பம் தரும். 911 பயனளவு பார்த்து இனிது பேசும் பரத்தையரின் வஞ்சனையை அறிந்து ஒதுங்குக. 9 12 பொருள் விரும்பும் பரத்தையரின் பொய்த்தழுவல் இருட்டறையில் ஒரு பிணம் தழுவியதுபோலும். 913 அருளை ஆராயும் அறிவினை யுடையவர் பொருளை ஆராயும் பரத்தையைத் தழுவார். 였1.4 இயற்கையறிவோடு நூலறிவும் உடையவர் பொது இன்பப் பெண்டிரைத் தழுவார். 9 15 அழகுத் திமிரால் சிறுநலம் பரப்புவாரது தோள்களை நன்மை நாடுபவர் தொடார். 9 16 பலவற்றைக் கருதிக் கூடும் பரத்தையரின் தோள்களை நெஞ்சுறுதியற்றவரே தீண்டுவர். 9 17 மாயம்வல்ல பரத்தையரின் தழுவல் சிந்தனையற்றவர்க்குத் தெய்வப்பேறு ஆகும். 918 மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது? * ஒருவரம்பில்லாத பரத்தையரின் தோள்ாகும். 919 திருமகள் கைவிட்டவர்களுக்கு உறவாவன: பரத்தையும் கள்ளும் சூதாட்டமும் ஆம். 92.0 186 நட்பியல் . - அதிகாரம் 92 வரைவின் மகளிர் அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் 911 இன்சொல் இழுக்குத் தரும். பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்துக்கி நள்ளா விடல். 912 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇ யற்று. 913 பொருட்பொருளர் புன்னலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். 914 பொதுநலத்தார். புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். 915 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். 916 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். 917 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ய மாய மகளிர் முயக்கு. 918 வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு 919 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920 187