பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை கள்ளுண்ணாமை என்றும் கள்ளாசை கொண்டு திரிபவர் வெட்கப்படார். மதிப்புக்குறைவர். கள் குடியற்க பெரியோரிடம் மதிப்புப் பெற விரும்பாதார் வேண்டுமானால் குடிக்கட்டும். கள்ளாட்டம் தாய்க்கும் அருவருப்பைத் தரும்: பெரியவர்க்கு என்ன ஆகும்? கள்குடிக்கும் தகாத பெருங்குற்றம் உடையவரை நாண் என்னும் நங்கை விட்டுப் போவாள். விலை கொடுத்தும் மெய்ம்மறதியை வாங்குதல் வாழத் தெரியாமையாகும். துஞ்சினவர் என்பவர் செத்தவரே! கள்ளுண்பவர் என்பவர் நஞ்சுண்பவரே. கள்ளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவரின் உள்ளத்தை அறிந்துகொண்டு ஊர்சிரிக்கும். குடியை மறைக்கலாம் என்பதை விட்டொழி: மறைத்ததைக் குடி உடனே வெளியாக்கும். குடிகாரனைச் சொல்லித் திருத்துதல் குளத்தில் விழுந்தவனை விளக்கால் தேடுதல் ஒக்கும். தான் குடியா நிலையில் குடித்தவனைக் காணின் தன் குடிமயக்கத்தை ஒருவன் உணரமாட்டானா? 188 பொருள் 92.1 922 923 924 92.5 926 927 928 92.9 930 நட்பியல் அதிகாரம் 93 கள்ளுண்ணாமை உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். 921 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். 922 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. - 923 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். 925 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். - 926 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். 927 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்தது.உம் ஆங்கே மிகும். 928 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. 929 கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ள்ான்கொல் உண்டதன் சோர்வு. 930 189 -