பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் அலர் அறிவுறுத்தல் ஊர் தூற்றுவதால் என் உயிர் வாழ்கின்றது: நல்லகாலமாக அது பலருக்குத் தெரியாது. 1141 மலர்போல் கண்ணாளின் அருமையை அறியாமல் இந்த ஊர் எனக்கு அலரைத் தந்தது. 1142 ஊர்ப்பேச்சு எனக்கு வாராதோ? அதனைப் பெறாமலே பெற்றது போல் என் மனம் மகிழும். 1143 காதல் ஊர்ப்பேச்சால் கவர்ச்சி அடைகின்றது; இல்லாவிடின் சிறப்பிழந்து சப்பென்றிருக்கும். 1144 மகிழ மகிழ கள்ளில் ஆசை பெருகும்: பலர் அறிய அறியக் காதல் சிறக்கும். 1145 அவரைக் கண்டது ஒருநாள்தான்; ஊர்ப்பேச்சோ திங்களைப் பாம்பு பிடித்தது போலப் பரவியது. 1146 ஊர்ப்பேச்சு உரம், தாயின் க்டுஞ்சொல் நீர்; இப்படியாக வளரும் இக்காதற் பயிர். 1147 ஊர்ப்பேச்சால் காமத்தீயை அணைக்க முடியுமா? நெய்யூற்றி நெருப்பை நூக்க முடியுமா? 1 148 அஞ்சாதே என்றவர் பலரறியப் பிரிந்தபோது ஊர்ப்பேச்சுக்கு அஞ்சி இருக்க முடியுமா? 1149 காதலர் அவர் விரும்பினால் அருளுவார்: இவ்வூர் நாம் எதிர்பார்த்தபடி தூற்றுகின்றது. 1150 234 களவியல் அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல் அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் ப்ாக்கியத் தால். 114; மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததில் ஆர். 1142 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. - 博43 கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. 1144 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. - 1146 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். - 1147 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். 箕8 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை - - t|49 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்.இவ் வூர். 1150 235 -