பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்படி நினைந்தவர் புலம்பல் நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சி தருதலால் கள்ளைக் காட்டிலும் காமம் இன்பமானது. 120.1 எந்த அளவிற்கும் இனியது காமம்; காதலர் நினைத்தால் துன்பம் ஒன்றும் வராது. 1202 தும்மல் வருவதுபோல நின்றுவிடுதலின் அவர் என்னை நினைப்பதுபோல விட்டுவிடுவாரோ? 1203 அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என் நெஞ்சிலோ அவர் நன்றாக இருக்கின்றார். 1204 தன் நெஞ்சில் என்னை வரவொட்டாதவர் என் நெஞ்சில் ஓயாது வர நாணவில்லையே. 1205 அவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதால் வாழ்கின்றேன்; வேறு எதனால் வாழ்கின்றேன்: 1206 கூட்டத்தை மறந்தால் என்னாவேன்? மறவேன்; பிரிவை நினைப்பினும் உள்ளம் கொதிக்கும். 1207 எத்தனைமுறை நினைத்தாலும் காதலர் சினவார்; எனக்கு அவர்காட்டும் பெருமை அவ்வளவு. 1208 நாம் ஒருவர் என்று சொன்ன காதலரின் - கொடுமையை மிக எண்ணி என்உயிர் போகும். 1209 துணிந்து சென்றவரைக் கண்டுபிடிப்பதற்குள் திங்களே! நீ மறைந்து விடாதே; வாழ்க. 12 i 0 246 கற்பியல் அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. 1201 ஏனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல், 1202 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். 1203 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். 1204 தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத்து ஒவா வரல். 1205 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். - 1206 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். - 1207 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. - 1208 క్ట్ర இன்னுயிர் வேறல்லம் என்பார் அளி ன்மை ஆற்ற நினைந்து. 1209 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. 1210 247