பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை உறுப்புநலன் அழிதல் நமக்குத் துன்பம் தந்து தொலை சென்றாரை நினைந்தழுத கண்கள் மலருக்கு நாணின. 1231 சோகை நிறம் பெற்று அழுகின்ற கண்கள் காதலரின் கொடுமையைக் காட்டுவன போலும். 123, கூடியநாளில் பெருத்த தோள்கள் மெலிந்து அவர் பிரிவை அம்பலப்படுத்துவன போலும், 1233 துணைவரைப் பிரிந்து அழகு வாடிய தோள்கள் பருமன் நீங்கி வளையல்களைக் கொட்டும். 1234 வளையல்களும் வனப்பும் சுருங்கிய தோள்கள் கொடியவரின் கொடுமையைச் சொல்லுகின்றன.128; வளையலும் தோளும் நெகிழ்வதால் அவரைக் கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன். 1236 காதலர்க்கு மெலியும் தோள்களின் மாறுபாட்டைச் சொல்லி, நெஞ்சே! பெருமை அடையாயா? 1237 அனைத்த கைகளைத் தளர்த்திய அளவிற்கே இப்பேதையின் நெற்றி பசலை பெற்றது. 1238 தழுவலிடைக் குளிர்காற்றுப் புகுந்த அளவிற்கே இப்பேதையின் குளிர்ந்த கண்கள் பசந்தன. 1239 நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலையோ வருத்தப் பட்டது. 1240 25% இன்பம் கற்பியல் அதிகாரம் 124 உறுப்புநலன் அழிதல் சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். 123协 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். - 1232 தணந்தமை சால அறிவிப்பு போலும் மணந்தநாள் வீங்கிய தோள். - 1233 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். 1234 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். 1235 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. 1236 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து. 1237 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது - பைந்தொடிப் பேதை நுதல். 1238 யக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பெருமழைக் கண். 邯239 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. 1240 253