பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் பிறனில் விழையாமை பிறன் மனைவியை விரும்பும் மடமை உலகில் அறம்பொருள் அறிந்தவரிடம் இருப்பதில்லை. 141 பிறனது வாயிலில் நிற்பவனைப் போலப் பெரும்பாவியும் பெரும்பேதையும் இல்லை. 142 நம்பினவர் வீட்டில் தீமை செய்பவர் செத்தவரல்லது வாழ்பவர் அல்லர். 143 அறிவின்றி அயலான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு பெரியவனாயினும் என்ன? 144 எளிதென்று கருதிப் பிறன்மனை நுழைபவன் என்றும் தீராத பழியை எய்துவான். 145 பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கும் பிறன் வீட்டில் நுழைவானை விடமாட்டா. 146 நெறியோடு வாழும் குடும்பத்தான் யார்? இன்னொரு குடும்பத்தாளை விரும்பாதவனே, 1 47 பிறன்மனையை விரும்பி நினையாத பேராற்றல் சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமும் ஆம். 1 48 உலகில் எந்நன்மைக்கும் உரியவர் யார்? பிறனுக்கு உரியவளை அணையாதவரே. l, 49 அறங்கடந்து தீமைபல செய்யினும் செய்க: பிறன்மனை விருப்பத்தை அறவே ஒழிக. | 50 3 Ö இல்லறவியல் அதிகாரம் 15 பிறனில் விழையாமை பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 141 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையர் இல், 142 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். 143 ஏனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். 144 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. 145 புகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். 146 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். 147 பிறன்மனை-நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. 148 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார். 149 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. 150 31