பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொறையுடைமை குழிபறிப்பாரையும் நிலம் சுமப்பது போல நம்மை இகழ்வாரையும் பொறுப்பதே சிறப்பு. பிறரது பெருங்குற்றத்தை என்றும் பொறுக்க: முடியுமாயின் மறக்க, அது மிக நல்லது. பெரியவறுமை வந்த விருந்தை நீக்குவது: பெரியவலிமை பேதையைப் பொறுப்பது. பெருந்தன்மை நீங்காதிருக்க வேண்டின் பொறுக்குந் தன்மையைப் போற்றிக் கொள்க. தண்டித்தவரை யார் மதிப்பர்? பொறுத்தவரையே பொன்போல் போற்றி மதிப்பர். தண்டித்தவர்க்கு அப்போதைய மகிழ்ச்சியே: பொறுத்தவர்க்கோ உலகம் உள்ளளவும் புகழ். பிறர் முறையல்லவற்றைச் செய்தாலும் வருந்தி நீ அறமல்லவற்றைச் செய்யாதே. தன் இறுமாப்பால் தீமை செய்தவரை நீ உன் பொறுமைச் சிறப்பால் வென்று விடுக. தரங்கெட்டவரின் வசவைப் பொறுப்பவர் துறந்தவரினும் துயவர். பட்டினி கிடந்து நோன்பிருப்பவர் பெரியவர்; அவரினும் பெரியவர் வசவைப் பொறுப்பவர். 32 அறம் 152 153 154 158 1.59 1 6 () இல்லறவியல் அதிகாரம் 16 பொறையுடைமை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை, 151 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 152 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. 153 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். 154 த்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் .ಫಿ பொன்போற் பொதிந்து. 155 றுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பான்றுந் துணையும் புகழ். 156 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். 158 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் ဂ္ယီဒီ့ီ႔ႏို நோற்பாரின் பின். 160 33