பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பெரியாரைத் துணைக்கோடல் அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது நட்பைத் தெரிந்து பெற்றுக் கொள்க. வந்த துயரைப் போக்கி வருமுன் காக்கும் திறமுடையவரைத் தழுவிக் கொள்க. பெரியவர்களைப் போற்றி ட &ు றவு கொள் அரிய செயல்களுள் எல்லாம் அரியது. நம்மினும் பெரியவர் நம்மவராக நடிப்பது எல்லா வன்மையினும் ஏற்றமானது. அறிஞர்களே அரசன் கண்கள் ஆதலின் அவர்களை ஆராய்ந்து அனைத்துக் கொள்க. பெரியவர்கள் துணையாக రీగల్రtJగ}శparు Lಣಹಖfಹ6ir என்ன செய்ய முடியும்: கடிந்துரைக்கும் நண்பர் உடையவரை யாரும் கெடுக்க முடியுமா? கடிந்துரைப்பார் இல்லாத தனி மன்னன் பகைவர் இன்றியும் கெடுவான். திேல் இல்லாதவர்க்கு ஊதியம் உடை, துணை இல்லாதவர்க்கு ஒரு நிலை உண்டோ: நல்லவர் ஒருவர் நட்பை விடுவது பலரைப் பகைப்பதினும் பெருந் தீமை. 92 பொருள் 441 4:42 443 444 445 血铁6 447 “ 4总9 450 அரசியல் அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். 441 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். 442 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். 443 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. 444 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் 445 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். 446 இடிக்குந்துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். 447 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். 448 முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை. 449 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். 450 93