பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை

  1. தெரிந்து தெளிதல் அறம்பொருள் இன்பம் உயிர்க்கு அஞ்சுதல் இவ்வகையால் ஒருவனை ஆராய்ந்து தெளிக. நற்குடியிற் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத் தக்கவன். சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும் பார்த்தால் ஓரளவு அறியாமை இருக்கும். ஒருவர் குணங்களையும் குற்றங்களையும் பார்த்து அவற்றுள் மிகுதியைக் கொண்டு தெளிக. இவர் பெரியவர் இவர் சிறியவர் என்று அறிய அவரவர் செயலே உரைகல்லாகும். மிக வறியவரை நம்பாதே ஏன்? அவர் எப்பிடிப்பும் இல்லார்: பழிக்கும் அஞ்சார்.

அன்பு காரணமாக அறிவிலாதவரை நம்புதல் எல்லா மடமையும் தரும், ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத துன்பம் வரும். ஆராயாது யாரையும் எளிதில் நம்பாதே; ஆய்ந்த பின்னும் நம்பும் பொருளை நம்புக. ஆராயாது நம்புதலும் பெருந்துன்புமே: நம்பியவனை ஐயப்படுத்தலும் பெருந்துன்பமே. - 1 04 பொருள் 501 502 503 504 505 506 507 508 50.9 5 1 () அரசியல் அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். so குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நானுட்ைய்ான் கட்டே தெளிவு. 502 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு, 503 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். . 504 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். 505 அற்றாரைத் தேறுதல் ஒம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. 506 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும். . . . . 507 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். . 508 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். 509 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். . 510 8 1 O5