பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் தெரிந்து வினையாடல் ஒரு செயலின் நன்மையும் தீமையும் பார்த்து நலஞ்செய்வானை வேலைக்குக் கொள்க. 511 வருவாய் பெருக்கி வளஞ் செய்து மேலும் ஆராய்பவனே காரியம் செய்யத் தக்கவன். 512 அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை நான்கும் உடையவனே நம்பத் தக்கவன். 513 எவ்வாறு தெளிந்தாலும் காரியத்தின் போது வேறாக நடப்பவரே மிகப் பலர். 5 i 4 ஒருவினையை அறிந்து முடிப்பவனிடமே ஏவுக; பெயர்பெற்றவன் என்பதற்காக ஏவற்க. 515 செய்பவன் தன்மையையும் செய்யும் செயலையும் ஏற்ற காலத்தையும் உணர்ந்து செய்க. 5 i 6 இச்செயலை இம்முறையால் இவன் முடிப்பான் என்று தெளிந்து வினையை ஒப்படைக்க. 517 வினைக்குத் தக்கவன் என்று தெளிந்தபின்பு அவனை முழுப் பொறுப்பு உடையவன் ஆக்குக. 518 காரியத்தில் கருத்தாக இருப்பவன் பண்பைத் தவறாக நினைத்தால் செல்வம் தவறும். 5 # 9 அரசன் நாள்தோறும் அலுவலரை ஆராய்க: அவர் பிசகாவிடின் நாடு பிசகாது. 520 106 அரசியல் - அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 5竹 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 512 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 513 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். 514 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். . 516 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். 517 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். 518. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. 519 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. 520 1 O7