பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் இடுக்கண் அழியாமை துன்பம் வரும்போது கேலிசெய்க: அதுவே துன்பத்தைக் கடக்க வழி. 621 வெள்ளம் போன்ற நெருக்கடியும் அறிஞன் ஊக்கத்தினால் நினைக்கவே ஓடிப்போம். 622 துன்பங் கண்டு துன்பப் படாதவர் துன்பத்தைத் துன்பப் படுத்துவர். 623 கடினப்பாதை செல்லும் காளைபோன்றவனுக்கு வந்த துன்பமன்றோ துன்பப்படும், 624 அடுக்கடுக்காக வரினும் அசையாதவனுக்கு வந்த துயரமன்றோ துயரப்படும்: 625 செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ? 626 இவ்வுடம்பு நோய்களுக்கு இலக்கு என்று இயல்பறிந்த மேலோர் கலக்கம் கொள்ளார். 627 இன்பத்தை விரும்பாது இடையூற்றை இயல்பு என்று கருதுபவன் வருத்தம் அடையான், 628 மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன் கவலையில் கவலை அடையான். 629 துன்பத்தை இன்பமாகக் கருதுபவனுக்கு எதிரியின் மதிப்பும் கிடைக்கும். 630 128 அரசியல் அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல், 621 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். 622 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். 623 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் ப்டும். 625 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஒம்புதல் தேற்றா தவர். 626 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். 627 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். 628 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். 629 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 630 129