பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் மன்னரைச் சேர்ந்தொழுகல் uালুণ্যাণ্ড பழகுபவர் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக. அரசர் விரும்புவனவற்றை விரும்பாவிடின் அவரால் நிலையான முன்னேற்றம் கிடைக்கும். பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க: அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது. காதோடு ஒதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் பெரியவர்முன் வைத்துக் கொள்ளாதே. எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே சொன்னாற் கேள். மன்னனின் குறிப்பறிந்து காலம் பார்த்து வேண்டியவற்றை விரும்புமாறு சொல்லுக. வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக: வேண்டாததைக் கேட்டாலும் சொல்லற்க. இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக. மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார் பிறழாத அறிவினை யுடையவர். பழக்கம் என்று பண்பில்லாதபடி நடந்தால் அந்த நட்புரிமை கேடு விளைக்கும். 142 69 1 692 693 694 695 § 96 697 698 699 700 அமைச்சியல் அதிகாரம் 70 மன்னரைச் சேர்ந்தொழுகல் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். 692 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. . 693 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. 694 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. 695. றிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வண்டுப வேட்பச் சொலல். 696 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். - 697 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். - 698 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். 699 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 700 143