பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை நட்புப்போல் செய்தற்கு அரியதும் இல்லை; பொருள் அதுபோல் காரியத்துக்குத் துணையும்வேறில்லை. 781 நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது: பேதையர் நட்புத் தேய்பிறை போன்றது. பழகப் பழகப் பண்புடையவர் நட்பு படிக்கப் படிக்க நூலின்பம் போலும். நட்புச் செய்தல் அரட்டை அடித்தற்கன்று: பிழை செய்யும்போது முன்வந்து இடித்தற்காம், நட்புக்குப் பலநாட் பழக்கம் வேண்டாம்: ஒத்த மனப்பான்மையே உறவு தரும். முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது; மனம் இனிக்கப் பழகுவதே நட்பு. தீமைகளை நீக்கி நல்வழிப் படுத்தித் துன்பத்தில் தொடர்பு கொள்வதே நட்பு. உடைநெகிழின் உடனே உதவும் கைபோல நண்பன் துயரை முந்திக்களைவதே நட்பு. நட்பின் உயர் நிலையாது? வேறு படாமல் முடிந்தவரை நண்பனைத் தாங்கி நிற்றல். இவர் இன்னார், யான் இன்னவன் என்று பிரித்துக் கூறினும் நட்பு பெருமை இழக்கும். 160 782 783 784 78s 786 787 T88 789 79 0 நட்பியல் அதிகாரம் 79 நட்பு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. 781 றைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் ಶ್ಗ பேதையார் நட்பு 782 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை'யாள்ர் தொடர்பு 783 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் ம்ேற்சென்று இடித்தற் பொருட்டு. 784 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். 785 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு - 786 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்க்ண் அல்லல் உழப்பதாம் நட்பு. 787 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு 788 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு 790 161