பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை கூடா நட்பு உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு வாய்ப்பு வரின் அடிக்கும் பட்டறையாம். உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு பரத்தை மனம்போல மாறுபடும். நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும் வஞ்சகர்க்கு நல்ல மனம் வாராது. முகத்திலே புன்சிரிப்புக் காட்டி அகத்திலே கொடிய வஞ்சகரை அஞ்ச வேண்டும். மனத்தில் ஒட்டாதவரை எந்த அளவிலும் சொல்லினால் நம்புதல் கூடாது. நண்பர் போல நல்லன கூறினாலும் தீயவர் கருத்து உடனே தெரிந்து விடும். பகைவரின் சொற்பணிவு கண்டு ஏமாறாதே; வில்லின் வளைவு தீமைக்கு அறிகுறி. பகைவர் தொழுத கைக்குள் படையிருக்கும்; அவர் அழுத கண்ணிரும் படையாகும். மிகவும் பழகி உள்ளே இகழ்பவருடன் நீயும் மகிழப் பேசி நட்பைக் குறைக்க, பகைவன் நண்பனாக வரும் சமயம் முகத்தால் ஏற்று அகத்தால் நட்பை விடுக. 168 பொருள் 821 822 823 82 5 826 827 828 829 8:30 நட்பியல் அதிகாரம் 83 கூடா நட்பு சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. 821 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். 822 பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. ... 823 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா - வஞ்சரை அஞ்சப் படும். - 824 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். . . 826 தீங்கு குறித்தமை யான். - 827 தொழுதகை ు படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து. 828 மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று 829 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். - 850 12 169